தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, அவரை விட, சிவாஜிக்கு தான் அதிக படங்கள் பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் முதன் முதலில், சிவாஜி படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வந்து பின்னாளில் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் தான் வாலி. ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த வாலிக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது கற்பகம் தான். அந்த படத்திற்கு பின் கவனிக்கப்படும் கவிஞர்களில் ஒருவராக மாறிய வாலி, எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துளளார்.
இவரின் பாடல்கள் மீது பெரிய ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆர் ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் இனி வாலி தான் என் படத்திற்கு பாடல்கள் எழுதுவார் என்று அறிவித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் நெருக்கம் சென்றாலும், அவரை விட சிவாஜிக்கே வாலி அதிக பாடல்கள் எழுதியுள்ளார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த வகையில் கடந்த 1965 அன்புக்காரங்கள் என்ற படத்தில், அனைத்து பாடல்களையும் வாலி தான் எழுதியுள்ளார்.
கே.ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன், கே.பாலாஜி, தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்.சுதர்சன் இசையமைத்த இந்த படத்திற்கு, வாலி எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் பாடல் பதிவு முடிந்தபோது, பாடலை கேட்க சிவாஜி கணேசன் வந்துள்ளார். அப்போது அவரிடம், ‘ஒன்னா இருக்க கத்துக்கணும், உண்மையை சொன்ன ஒத்துக்கனும்’ என்று என்ற பாடலை போட்டுள்ளனர்.
சிவாஜி பாடலை கேட்கும்போது வாலி வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த சிவாஜி கணேசன், ஏற்கனவே எம்.ஜி.ஆர் படத்திற்கு எழுதுகிறான், இப்போது வாய் நிறைய வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டு இருக்கிறான் என்று கடுப்பாகியுள்ளார். ஆனால் பாடலை கேட்ட சிவாஜி, பாட்டு நல்லா இருக்கு, காபி சாப்டீங்களா என்று கேட்க, அதெல்லாம் ஆச்சு என்று வாலி கூறியுள்ளார்.
அதன்பிறகு அதன்ன வெற்றிலைப்பாக்கு போட்டாதான் பாட்டு வருமா என்று கேட்க, இல்லை வெற்றிலைப்பாக்கு போடவில்லை என்றால் வாசனை வரும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜி, அந்த பழக்கம் எல்லாம் உண்டா என்று கேட்க, சிக்கன் சாப்பிட வேண்டும் என்றால் அது இல்லாம எப்படி என்று வாலி கேட்டுள்ளார். இதை கேட்டவுடன் அவருடன் ப்ரண்ட் ஆன சிவாஜி, தான் சிவாஜி பிலிம்ஸில் தயாரித்த பல படங்களுக்கு வாலியிடம் பாடல் எழுதி வாங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“