க்ளாசிக் சினிமாவில் தொடங்கி தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் வாலி. கண்ணதாசனின் பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் அவருக்கு போட்டியாகவே தமிழ் சினிமாவில் கவிஞராக வலம் வந்த வாலி கண்ணதாசனுடன் தொழில் ரீதியான போட்டி இருந்தாலும், அவருடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்துள்ளார். இவர்களுக்கு இடையிலான நெருக்கமாக நட்புக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
அதேபோல் சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சென்னையில் இருந்து வெளியேறி மதுரையில் தனது நண்பர் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு வேலைக்காக புறப்பட தயாரான வாலிக்கு கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல் தான் மீண்டும் சினிமாவில் முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதன்பிறகு தீவிரமாக முயற்சித்த வாலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதலில் சில படங்களுக்கு எழுதிய வாலி, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே சுமோகமான உறவு இல்லாதபோது, எம்.ஜி.ஆரின் அஸ்தான கவிஞராக உள்ளே வந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, பல மேடைகளில் கண்ணதாசன் பாடல்களை விமர்சிப்பதும், கண்ணாசன் பல மேடைகளில் வாலியின் பாடல்களை விமர்சிப்பதும் நடந்துள்ளது.
பகலில் இப்படி இருந்தால் இரவில் மதுக்கோப்பையுடன் நாங்கள் ஒன்றாக இருப்போம் என்று வாலி பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். அப்படி ஒருமுறை, 1972-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வெள்ளி விழா ஆண்டு வருகிறது. அப்போது திரைத்துறையை சேர்ந்த அனைவருக்கும் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த விருந்துக்கு வருமாறு கண்ணதாசன் வாலிக்கும் அழைப்பு விடுக்கிறார். வாலி உட்பட பலரும் அந்த விருந்துக்கு வந்துள்ளனர் திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் விலைமாதுக்களுடன் இந்த ஹோட்டலுக்கு வந்து மாட்டிக்கொள்வார்கள். அப்படியான ஹோட்டலில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியின் இரவில், விலை மாதுக்கள் வந்தபோது, கவிஞர் வாலி ஒருவருடன் ஒரு அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அறைக்கு வெளியில் இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்கிறது. இதில் கண்ணதாசனின் உதவியாளர் ஒருவர் இப்போது வாலி இங்கு இருக்கிறார். போலீசாரிடம் புகார் அளித்தால் அவர்கள் அவரை வந்து அழைத்து சென்று விடுவார்கள். அவர் பெயர் நாளை பேப்பரில் வந்துவிடும் அதன்பிறகு எம்.ஜி.ஆர் இவரை எப்படி பாடல் எழுத அழைப்பார்? நமக்கும் போட்டி இல்லாமல் இருக்கும் என்று கண்ணதாசனிடம் கூறியுள்ளா.
இதை கேட்ட கண்ணதாசன் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டு, எனக்கு யார் போட்டியாள வந்தாலும் அவர்களை என் தமிழால் நான் எதிர்ப்பேனடா நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அவர் என்னை நம்பி இங்கு வந்திருக்கிறார். அவர் பத்திரமாக திரும்பி செல்ல வேண்டும். அவர் வெளியில் வந்து காரில் ஏறி பத்திரமாக வீடு செல்லும் வரை கூடவே இருந்து எனக்கு தகவல் சொல் என்று சொல்லிவிட்டு கண்ணதாசன் கிளம்பியுள்ளார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த வாலி, உடனடியாக கதவை திறந்து விட்டு தனது காரை நோக்கி புறப்பட்டுள்ளார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இது குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் கவிஞர் வாலி தெரிவித்ததாக துரை சரவணன் என்ற யூடியூப் சேனலில் வெளியாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“