தமிழ் சினிமாவில் தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் வாலி. 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய, தற்போதைய நடிகர் சிம்பு வரை பல நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அதேபோல் சினிமாவில் கண்ணதாசனுக்கு போட்டியாக பாடல் எழுத வந்திருந்தாலும், இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்துள்ளது.
Advertisment
1959-ம் ஆண்டு கே.பாலாஜி நடிப்பில் வெளியான அழகர் மலை கள்வன் என்ற படம் தான் வாலி பாடல் எழுதிய முதல் படம். அதற்கு முன்பே சினிமாவில் பாடல் ஆசிரியராக கவியரசர் கண்ணதாசன் முத்திரை பதித்துள்ளார். அவருக்கு போட்டியாக வந்த வாலி, ஒரு கட்டத்தில் எம.ஜி.ஆரின் விருப்பமான கவிஞராக மாறிவிட்டார். இதற்கு எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே ஏற்பட்ட மோதலும் ஒரு காரணம்.
தொடர்ந்து வாலி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தாலும், அவ்வப்போது கண்ணதாசனும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். வெளியில் மேடைகளில் கண்ணதாசன் வாலி இருவரும் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருநதாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கண்ணதாசன் வாலியின் பாடலை புகழ்வதும், வாலி கண்ணதாசனை பாடலில் புகழ்ந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
Advertisment
Advertisements
அந்த வகையில் சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் வாலி எழுதிய ஒரு பாடலில் கண்ணதாசனுக்கு புகழ் சேர்த்திருப்பார். 1983-ம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், பிரபு சில்க் ஸ்மிதா, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியுள்ளார். அந்த பாடல் தான் காளிதாசன் கண்ணதாசன் என்ற பாடல்.
கண்ணதாசன் என்னை விட 6 வயது சீனியர், அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தது. அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பாடலை எழுதினேன். அதற்காக தான் வடநாட்டுக்கு ஒரு காளிதாசன் தென்னாட்டுக்கு ஒரு கண்ணதாசன் என்ற அடிப்படையில் இந்த பாடல் அமைந்தது என்று வாலியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news