எம்.ஜி.ஆர் பேச்சை கேட்காமல், திடீரென திருமணம் செய்துகொண்டதால் கவிஞர் வாலி மீது எம்.ஜி.ஆர் கோபமடைந்த நிலையில், திடீரென ஒருநாள் இருவரும் இணைந்துள்ளனர். இது குறித்து வாலியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர். எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த வாலி, கடைசி வரை முன்னணி கவிஞராக இருந்தார்.
அதே சமயம் எம்.ஜி.ஆர் – வாலி இருவருக்கும் இடையே மோதலும் இருந்துள்ளது. ஏ.வி.எம் தயாரிப்பில் ஏ.சி திரிலோகச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் வாலி தான் எழுதியுள்ளார். இதில் ஞாயிறு என்பது பெண்ணாக என்ற பாடலின் ரெக்கார்டிங்க்கு 4 நாட்களுக்கு முன்னதாக தனது அண்ணன் அக்கா ஆகியோரை பார்க்க மும்பை செல்ல முடிவு செய்துள்ளார் வாலி.
இதற்காக ஏவிஎம் நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்ட அவர், அண்ணனை பார்க்க போகிறேன் என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று தனக்கு பொண்ணு பார்க்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு ரெக்கார்டிங் நடக்கும் நாள் வரை வாலி வராத நிலையில், மெய்யப்ப செட்டியார் கேட்டதற்கு வாலி பெண் பார்க்க போயிருக்கிறார் என்று சொல்ல நியாயமான காரணம் தான் என்று அவரும் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்கள் ரெக்கார்டிங்க்கு வாலி வரவில்லையா என்று கேட்டபோது அவர்கள் பெண் பார்க்க போயிருக்கிறார் என்று சொல்ல, அன்று மாலையே செய்தியில் வாலி பொண்ணு பார்க்க போயிருக்கிறார் என்று வெளியிட்டுள்ளனர். ஆனால் பணம் வேண்டும் என்பதால் பெண் பார்க்க போவதாக பொய் சொல்லிவிட்டு வாங்கிட்டு போணேன். இந்த செய்தி வெளியான 4-வது நாள் நான் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.
அப்போது என்னை வரவேற்ற அவர், வாங்க டிபன் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு, செய்தியில் பார்த்தேன். உங்கள் திருமணத்தை நான் தான் நடத்துவேன் என்ன பொண்ணு பிடிச்சிருக்கா என்று கேட்டுள்ளார். அதில் சுதாரித்துக்கொண்ட வாலி இல்லண்ணா அந்த பொண்ணு எனக்கு பிடிக்கலை என்று சொல்ல, நீங்கள் காலையில் சம்பாதிக்கிறீங்க இரவில் செலவு செய்றீங்கனு கேள்விப்படடேன். ரொம் கெட்ட வழியில் போறீங்க இது நல்லாருக்காது ஒரு கல்யாணம் பண்ணிக்கனும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதை கேட்ட வாலி இப்போ ஒரு பொண்ணு பார்த்திருக்கிறேன் அண்ணா என்று சொல்லியிருக்கிறார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் உங்கள் கல்யாணத்தை நான் தான் நடத்துவேன் நீங்க என்ட சொல்லனும் என்று கூறியுள்ளார். அப்போது சரி என்று சொல்லிவிட்டு சென்ற வாலி அடுத்த வாரமே தனது காதலியை திருப்பதியில் வைத்து எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். அன்று மாலையே கவிஞர் வாலி காதல் திருமணம் என்று செய்தியில் வந்துவிட்டது. இவ்வளவு தூரம் சொல்லியும் ஒரு வார்த்தை சொல்லாமல் இப்படி பண்ணிட்டியே என்று எம்.ஜி.ஆர் கோபமாகியுள்ளார். அன்றில் இருந்து எம்.ஜி.ஆர் வாலியிடம் பேசாமல் இருந்துள்ளார்.
அதன்பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் கார் என் வீட்டு வாசலுக்கு வந்தது . அண்ணே சின்னவர் (எம்.ஜி.ஆர்) டிபன் சாப்பிட அழைத்து வர சொன்னார் என்று சொல்ல வாலி அவருடன் செல்ல தயங்கியுள்ளார். அதன்பிறகு அவரது மனைவி அவரே கூப்பிட்டிருக்கிறார் போய்ட்டு வாங்க என்று சொல்ல வாலியும் கிளம்பி எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றுள்ளார். எம்.ஜி.ஆர் எப்போதுமே டைனிங் டேபிளில் தான் அனைவரையும் சமாதானப்படுத்துவாராம்.
அப்போது வாலி சாப்பிட தொடங்கியவுடன், நான் ஏன் பேசாமல் இருக்கிறேன் போகமாப இருக்கிறேன் என்று கேட்க கூடாது, எனக்கு பாட்டு எழுதனும். தாழம்பூ படம் என்று கூறியுள்ளார். இதை கேட்டு வாலி சரி என்று சொல்லி சுட்சிவேஷன் என்ன என்று கேட்க, ஏன் உங்களுக்கு தெரியாதா என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்போது எழுதியது தான் ‘’எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்’’ என்ற பாடல் என வாலி 1000 நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.