தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.
Advertisment
இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல். அதே சமயம் வாலி தொடக்கத்தில் சாப்பாட்டுக்கே வழியில் இல்லாமல் இருந்ததும், எம்.எஸ்.வியை சந்தித்த பிறகு சாப்பிடுவதற்கே நேரமில்லை என்று அவரே கூறியுள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது அவரை பார்க்க பிரபல பாடகரும் அவரின் நண்பருடான பி.பி.சினிவாஸ் வந்துள்ளார். அவரிடம் கடைசியாக என்ன பாட்டு பாடின என்று வாலி கேட்க, சுமைதாங்கி படத்தில் கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை பாடியதாக சொல்கிறார்.
இந்த படலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது எழுத்தாளர் மாரா அறிமுகம் கிடைத்து அவர், வாலிக்காக பலரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அந்த வகையில் முக்தா சீனிவாசனிடம் சென்று, அவர் அப்போது இயக்கிக்கொண்டிருந்த இதயத்தில் நீ என்ற படத்தில் பாடல் எழுத வாலிக்காக பேசியுள்ளார். அவரும் எம்.எஸ்.வியிடம் இது பற்றி கூறியுள்ளார்.
Advertisment
Advertisement
வாலி பற்றி கேட்ட எம்.எஸ்.வி, நாங்க்ள பிஸியாக இருக்கிறோம் புது ஆளை வைத்து எப்படி என்று கேட்டுள்ளார். ஆனாலும் சரி பரவாயில்லை நாளை அவரை வரச்சொல்லுங்கள் என்று கூறியுள்ளர். அதன்பிறகு முக்தா சீனிவாசன் படத்தின் சூழ்நிலையை சொல்லி 4 அல்லது 5 பல்லவி எழுதிக்கொண்டு வாருங்கள். விஸ்வநாதனிடம் காட்டுவோம் அவர் சரி என்றால் வைத்துக்கொள்வோம். இல்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் பாடல் எழுதி வாருங்கள் என் சொந்தக்காரர் என்று சொல்லி அவரிடம் கொடுப்போம் என்று முக்தா சீனிவாசன் கூறியுள்ளார்.
இதை கேட்ட வாலி, நீங்கள் அப்படி சொல்லக்கூடாது. என் திறமைக்கு தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும். மாறாக சிபாரிசில் வரும் வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அடுத்த நாள் வாலி, ஒரு முழு பாடலை எடுத்துக்கொண்டு ஸ்டூடியோவுக்கு போயுள்ளார். வாலி எழுதிய பாடலை படித்து பார்த்த எம்.எஸ்.வி பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். அதன்பிறகு ஒரு பாட்டு மட்டும் கொடுத்தால் போதாது இன்னொரு பாட்டையும் கொடுங்கள் என்று சொல்லி, மற்றொரு பாடலையும் கொடுத்துள்ளனர்.
இதேபோல் இந்த படத்தில் 4 பாடல்களை வாலி எழுதியுள்ளார். இந்த 4 பாடல்களையும் பார்த்து அசந்துபோன எம்.எஸ்.வி, தனக்கு நெருக்கமான அனைத்து இயக்குனர்களுக்கும் போன் செய்து வாலியை பற்றி கூறியுள்ளார். அடுத்த நாளில் இருந்து வாலிக்கு பாடல் எழுத வாய்ப்புகள் குவிந்துள்ளது. இதைத்தான் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும் முன்பு எனக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை. அவரை சந்தித்த பிறகு சாப்பிடவே நேரமில்லை என்று ஒரு மேடையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“