கருத்து சொன்ன டி.எம்.எஸ்... மறுத்த இசை அமைப்பாளர் : வசந்த மாளிகை பாடல் ஹிட் ஆனது எப்படி?
வசந்தமாளிகை படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், இன்றுவரை பலரும் ரசிக்க கூடிய பாடல்களாகவும் அமைந்துள்ளது.
வசந்தமாளிகை படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், இன்றுவரை பலரும் ரசிக்க கூடிய பாடல்களாகவும் அமைந்துள்ளது.
சிவாஜி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய வசந்த மாளிகை படத்தில் இடம் பெற்ற யாருக்காக என்ற பாடலை பாடிய டி.எம்.சௌந்திரராஜன் கோரிக்கையை ஏற்க மறுத்தாலும் இறுதியில் அவரால் தான் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கிலும் புகழ் பெற்றது என்று சொல்லலாம்.
Advertisment
தமிழ் சினிமாவில் கடந்த 1972-ம் ஆண்டு கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான படம் வசந்த மாளிகை. சிவாஜி, வாணிஸ்ரீ, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, கே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
வசந்தமாளிகை படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், இன்றுவரை பலரும் ரசிக்க கூடிய பாடல்களாகவும் அமைந்துள்ளது. ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற பாடல், கடந்த 2009-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான இந்திரவிழா என்ற படத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்ற யாருக்காக என்ற பாடல் இன்றும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்ற கலைமகள் கை பொருளே என்ற ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் தெய்வீக பாடகர் டி.எம்.சௌந்திரராஜனே பாடியிருந்தார். அதேபோல் பெண் குரலில் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வசந்தா ஆகியோர் பாடியிருந்தனர்.
Advertisment
Advertisements
வாணிஸ்ரீயை சிவாஜி தீவிரமாக காதலித்து வருவார் அவருக்காக ஒரு மாளிகையே கட்டுவார். ஆனால் இறுதியில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வாணிஸ்ரீ வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள நேரிடும். இந்த நேரத்தில் சிவாஜி இனிமேல் குடிக்கவே கூடாது என்று சத்தியமும் வாங்கிவிடுவார் வாணிஸ்ரீ. தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருணம் நடக்க போகிறதே என்ற விரக்தியில் சிவாஜி பாடும் பாடல் தான் யாருக்காக என்ற பாடல்.
இந்த பாடலை பாட வந்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன். இந்த பாடல் திரையரங்குகளில் பெரிய வெற்றி பெறும். அதேபோல் பாடலின் இறுதியில் யாருக்காக என்று வரும்போது கொஞ்சம் எக்கோ கொடுத்தால் பாடல் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் கூறியுள்ளார். ஆனால் டி.எம்.எஸ். வார்த்தையை கேட்காத அவர் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் நீங்க பாடுங்க என்று கூறியுள்ளார்.
ஆனாலும் விடாத டி.எம்.எஸ். நான் சொல்வது போல் எக்கோ வையுங்கள் அதன்பிறகு பாடல் சிறப்பாக இல்லை என்றால் எடுத்துவிடலாம் என்று சொல்லி பாடியுள்ளார். பாடலை எக்கோவுடன் கேட்ட அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போகிறது. அதேபோல் படம் வெளியானபோது இந்த பாடலின் இறுதியில் எக்கோ வரும் வரிகளுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டியுள்ளனர். இதை பார்த்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் டி.எம்.எஸ் சொன்னது சரிதான் என்று புரிந்துகொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“