1965-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிர்மலா. முதல் படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததால் அதன்பிறகு வெண்ணிற ஆடை நிர்மலா என்று அழைக்கப்பட்ட இவர், தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ரகசிய போலீஸ் 115, பூக்காரி, நாளை நமதே, இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன் உள்ளிட்ட பல படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ள வெண்ணிற ஆடை நிர்மலா, வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார். ராஜராஜேஸ்வரி, தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல சீரியலிகளிலும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள வெண்ணிற ஆடை நிர்மலா 400-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளா. ஒருமுறை டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து வென்னிற ஆடை நிர்மலாவுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு வந்துள்ளது.
அப்போது ஒரு படத்தில் பிரிட்டீஷ்காரர்கள் ஐஸ் கட்டியில் வெண்ணிற ஆடை நிர்மலாவை படுக்க வைத்து துன்புறுத்துவது போன்ற காட்சியில் நடித்திருந்தார். அதே போல் எம்.ஜி.ஆர் படத்திலும் பனிக்கட்டி தொடர்பான ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த இரு காட்சிகளிலும் நடித்ததால் நிர்மலாவுக்கு ஜலதோஷம், இருமல் அதிகமாக இருந்துள்ளது. ஆனாலும் அவர் டெல்லி செல்ல தயாராகி கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென அவரது அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளது. இது பற்றி கேட்டபோது படக்குழுவினர் உங்களது பொருட்கள் அனைத்தும் சின்னவர் (எம்.ஜி.ஆர்) அறையில் இருக்கிறது என்று கூறியுள்ளனர். உடனாடியாக எம்.ஜி.ஆர் அறைக்கு சென்ற நிர்மலாவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர் ஒரு கட்டளை இட்டுள்ளார்.
இந்த நேரத்தில் நீ டெல்லி செல்லக்கூடாது. இப்போது நீ சென்றால் உனக்கு நிமோனியா வருவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் கண்டிப்பாக செல்ல கூடாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா, தமிழ்நாட்டின் சார்பில் நானும் கமலும் செல்ல வேண்டும். ஆனால் தற்போது கமலுக்கு படபிடிப்பு இருப்பதால் நான் கண்டிப்பாக செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீ சென்று உனக்கு ஏதும் ஆகிவிட்டால் நீ நிம்மதியாய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். ஆனால் உன் படத்தின் தயாரிபாளர் தான் நஷ்டபட வேண்டுமா என்று கேட்டு, கடைசி வரை அவரை டெல்லி போக எம்.ஜி.ஆர் விடவில்லை. இதன் காரணமாக நிர்மலா அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்துவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.