தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகாந், ஒரு படத்தில் நடிப்பதற்காக, 3 மடங்கு சம்பளம் கேட்டார். அதையும் நான் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேன் என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அந்த படம் வெற்றி பெற்றதா?
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் விஜயகாந்த். சினிமா பின்புலம் இல்லை என்றாலும், தனது தொடர் முயற்சிகளின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர், எம்..ஜி.ஆர் பாணியில்,சினிமாவில் அனைவருக்கும் சமமான உணவு என்ற வழக்கத்தை கொண்டு வந்தவர்.
அதேபோல் அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா நடிகர் என்ற அடையாளம் பெற்றிருக்கும் விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வேலைகளையும் செய்துள்ளார். இன்றைய நடிகர்களில் தமிழ் தவிர வேற்று மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் தான்.
தற்போது அவர் இல்லை என்றாலும், அவரை பற்றி சினிமா பிரபலங்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர், அந்த வகையில், சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விஜயகாந்த் பற்றி கூறுகையில், விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கூறி அவரின் நண்பர் ராவுத்தரை சந்தித்தேன். அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடிவிடுவேன் என்று நினைத்து, அப்போது விஜயகாந்த் வாங்கும் சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டார்.
அவர் கேட்டதற்கு நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். அட்வான்ஸ் எப்போது வேண்டும் என்று நான் கேட்டவுடன் அவர் ஷாக்காகிவிட்டார். அப்போது உருவான படம் தான் கூலிக்காரன். இந்த படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து எடுக்க முடிவு செய்தோம். அதன்பிறகு அவர்தான் விஜயகாந்தை வைத்து எடுங்கள் என்று சொன்னார் என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“