கேப்டன் விஜயகாந்தின் 100-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து கேப்டன் என்ற அடைமொழியை பிரபலமாக்கியது.
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், பல ஹிட் படங்கள் வெளியாகி இன்றும் அவர் பெயர் சொல்லும் படங்களாக இருந்தாலும கேப்டன் பிரபாகரன் என்ற படம் அவருக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம்.
Advertisment
சினிமாத்துறையை பொருத்தவரை ஒவ்வொரு நடிகருக்கும் 50- மற்றும் 100-வது படம் மிகவும் முக்கியமான படமாக அமைய வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக முன்னணி நடிகர்கள் என்றால் அவர்களை விட அவர்களது ரசிகர்கள் தான் பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பார். ஆனால், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஆகியோருக்கு 100-வது படம் சிறப்பான வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்தின் 100-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து கேப்டன் என்ற அடைமொழியை பிரபலமாக்கியது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய இந்த படத்தில், ரூபினி, சரத்குமார், லிவிங்ஸ்டன், காந்திமதி, ரம்யா கிருஷ்ணன், ஆகியோருடன் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லமல், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் வரும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ரம்யாகிருஷ்ணன் ஆடிய, ஆட்டமா தேரோட்டமா பாடல், மற்றும் பாசமுள்ள பாண்டியரே ஆகிய இரு பாடல்களும் இன்றும் காலம் கடந்து நிலைத்திருக்கிறது. ஆனால் பாசமுள்ள பாண்டியரே பாடல் விஜயகாந்த் படத்திற்காக எழுதப்பட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும. இளையராஜா இசையில கங்கை அமரன் எழுதிய இந்த பாடல்,
Advertisment
Advertisement
அதே சமயம் இந்த படத்தில் நடித்த விஜயகாந்த்க்கும் இந்த பாடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த படத்தில் விஜயகாந்த் தான் ஹீரோ என்றாலும், இந்த பாடலில் மன்சூர் அலிகான், லிவிங்ஷ்டன் ஆகியோர் தான் இருப்பார்கள் பாடலுக்கு இடையில், விஜயகாந்த் காட்சிகள் வரும். அப்படியென்றால் இந்த பாடல் யாருக்கான எழுதப்பட்டது என்பது தெரியுமா?
அந்த காலத்தில் கங்கை அமரன் பாடல்கள் எழுதினால், தனது அண்ணன் பாவலர் வரதராஜனை ஒரு இடத்திலாவது இடம்பெறும் வகையில், எழுதிவிடுவார். அந்த வகையில் எழுதியது தான் இந்த பாடல். அவர் தனது அண்ணன், பாவலர் வரதராஜனை மனதில் வைத்து, பாசமுள்ள பாண்டியரே, பாட்டு கட்டும் பாவலரே என்று எழுதியிருந்தாலும், இது விஜயகாந்துக்கான எழுதப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் மதுரைக்காரர் என்பது தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“