தனது திரை வாழ்க்கையில், தமிழ் படங்களில் மட்டுமே நடித்து கேப்டன் என்ற படடத்துடன் முன்னணி நடிகராகவும் அரசியல் தலைவராகவும் திகழ்ந்த விஜயகாந்த், பார்த்திபன் சொன்ன உரு கதையை கேட்டு, அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்தாலும், கடைசி நேரத்தில் முடியாமல் போக அந்த கதையில் பார்த்திபனே நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பார்த்திபன். நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்து ஒரு சில படங்களில், சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர், இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவனி கனவுகள் படத்தில் உதவி இயக்குனராகவும், அந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
1984-ம் ஆண்டு வெளியான தாவனி கனவுகள் படத்தில், நடித்திருந்தாலும், அதன்பிறகு 5 வருடங்கள், பட வாய்ப்பு இல்லாமல் இருந்த பார்த்திபன், இயக்குனர் ஆக வேண்டும் என்ற முயற்சியில், பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறியுள்ளார். ஆனாலும் அவர் இயக்குனர் ஆக யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்புகள் பாதியில் நின்றுபோகம் நிலையே நீடித்துள்ளது. அதன்பிறகு, 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அறிமுகமானார்.
நடிகை சீதா நாயகியாக நடித்த இந்த படத்தில் மனோரமா, நாசர், எஸ்.எஸ்.சந்திரன், வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ரவுடியை திருத்தும் மனைவியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பார்த்திபனுக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. இந்த படத்தின் கதையில் தான் விஜயகாந்த் நடிக்க அசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது ஆசை நிராசையாக போனது.
இயக்குனர் ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருந்த பார்த்திபன், இயக்குனரும் தயாரிப்பாளருமான கலைப்புலி தானுவிடம், கதையை கூறியுள்ளார். இந்த கதையை கேட்டு பிடித்துபோன அவர், விஜயகாந்திடம் சொல்ல, அவர் இந்த கதையை கேட்டுள்ளார். அவருக்கு கதை மிகவும் பிடித்துள்ளது, ஆனால், பார்த்திபன், இயக்குனராக முதல் படம் என்பதால், கதை மற்றும் திரைக்கதையை வாங்குங்கள், நாம வேற ஒரு இயக்குனரை போட்டு எடுக்கலாம் என்ற கலைப்புலி தானுவிடம் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதை கேட்ட கலைப்புலி தானு, புதுப்பையன் சார் வளர்ந்து வரட்டுமே என்று சொன்னாலும், விஜயகாந்த் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதற்கு உடன்படாத பார்த்திபன், இந்த படத்தை கேள்விக்குறநி என்ற பெயரில் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த படமும் பாதியில் நி்க அதன்பிறகுதான், புதிய பாதை என்ற பெயரில் 1989-ம் ஆண்டு இயக்கி நடித்து வெளிட்டுள்ளார். இந்த படம் பார்த்திபனுக்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“