தமிழ் திரையுலகில் கவிஞர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் கவிஞர் வாலி. 1950-களில் தொடங்கிய தற்போதைய இளம் நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், அழகர்மலை கள்வன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்தவர் வாலி.
பல புத்தகங்களை எழுதியுள்ள வாலி, காதல் வைரஸ், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரின் தத்துவம் மற்றும் காதல் பாடல்கள் இன்றைய ரசிகர்களுக்கும் பிடித்தமான பாடல்களாகவே அமைந்துள்ளது. இவரைப்போலவே டிஜிட்டல் சினிமாவின் இசையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தனது திரை பயணத்தை இசையமைப்பாளராக தொடங்கினார்.
அதன்பிறகு தமிழ் சினிமாவின் இசையை புதிய ட்ரெண்டுக்கு கொண்டு சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் கவிஞர் வாலியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜெண்டில்மேன், பிரபுதேவாவின் காதலன், இந்தியன், காதல் தேசம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தது இந்த கூட்டணி. அதேபோல் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் பெரிய ஹிட்டடித்தது.
இந்த பாடலை எழுதும்போது அன்பே வா என் முன்பே வா என்று தான் வாலி எழுதியுள்ளார். இதை கவனித்த ஏ.ஆர்.ரஹ்மான். நமது கூட்டணியில் மா வரிசையில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. இதனால் இந்த பாடலை முன்பே வா என் அன்பே வா என்று தொடங்குமாறு கூறியுள்ளார்.
ரஹ்மான் சொன்னதை ஏற்றுக்கொண்ட வாலியும் அவ்வாறே எழுதியுள்ளார். பாடல் வெளியானி மிகப்பெரிய ஹிட் அடித்து படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் அந்த பாடல் மட்டும் ரசிகர்கள் மனதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதே சமயம் சிறிய வயதானாலும் ரஹ்மான் சொன்ன திருத்தத்தை புரிந்துகொண்ட வாலி பெரிய மனதோடு மாற்றியது ஈகோ இல்லாத மனிதன் என்ற அடையாளத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“