/indian-express-tamil/media/media_files/2025/01/29/zlPsYKFcMTblCqIhexFC.jpg)
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இவர் இசையமைத்த 3-வது படம் பத்திரகாளி. 1976-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இளையராஜா இசையமைத்த 3-வது படமாகும்.
பிரமணர் குடுமபத்து கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல் இன்றும் ஒரு சிறப்பான வெற்றிப்பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலுக்கான டியூனை கேட்டதும், வாலி தனது ஸ்டைலில் பாடலை எழுத தொடங்கியுள்ளார். அப்போது அருகில் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்த கங்கை அமரனும் பேப்பரில் எதையோ எழுதிக்கொண்டிருந்துள்ளார்.
பாடலை எழுதி முடித்த வாலி, நீ என்ன எழுதிக்கொண்டு இருந்தாய் என்று கங்கை அமரனிடம் கேட்க, உங்களிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று விரும்பினேன். அது இப்போது தான் நடந்துள்ளது. உங்களுடன் இணைந்து நானும் பாடல் எழுதினேன் என்று கூறியுள்ளார். அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல் தான் ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல். இந்த பாடல் ரொம்ப நல்லாருக்கே என்று வாலி கூறியுள்ளார்.
இந்த பாட்டுக்கு மெட்டை நாங்கள் முன்பே போட்டுவிட்டோம் என்று இளையராஜா கூறியுள்ளார். கங்கை அமரன் ஒரு பாடல் எழுதினால் அதற்கு இளையராஜா இசையமைப்பதும், இளையராஜா மெட்டுக்கு கங்கை அமரன் பாடல் எழுதுவதும் இவர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இருந்த வழக்கம். அந்த வகையில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இந்த மெட்டுக்கு பாடல் மூன்று தமிழ் காவியமும் முருகனுக்கு தொட்டிலடி, முத்தமிழின் சங்கமமும் முரகனுக்கு கட்டிலடி’’ என்று எழுதியுள்ளார்.
அப்படி எழுதிய பாடல் தான் ‘’கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று இருக்கிறது. இந்த பாடல் பதிவின்போது, பாடலை பாட கே.ஜே.யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா வந்துள்ளனர். அப்போது சுசீலா ஒரு பக்கம் பாடிக்கொண்டிருக்கும்போது இடையில், பாடகர் கே.ஜே.யேசுதாஸ், யூனிட்டில் இருந்த அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதை பார்த்த இளையராஜா எதற்காக ஸ்வீட் கொடுக்கிறீங்க என்று கேட்க, அதற்கு கே.ஜே.யேசுதாஸ் ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
இந்த பாடல் கண்ணன் ஒரு கை குழந்தை என்று கண்ணனை பற்றிய பாடல். இந்த பாடல் பதிவு செய்யப்படும் இன்று கோகுலாஷ்டமி. இந்த தினத்தில் கண்ணன் பாட்டு பாடும்போது ஸ்வீட் இல்லாமல் எப்படி என்று கேட்டுள்ளார். இதை கேட்ட இளையராஜாவும் தனக்கு இது தெரியவில்லையே என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.