எம்.எஸ்.வி மெனக்கட்டு உருவாக்கிய 'அதிசய ராகம்': பாடல் வெளியான பிறகு ஜேசுதாஸுக்கு வந்த கோபம்
இதுவரை யாரும் பயன்படுத்தாத ராகமாக இருக்க வேண்டும். அபூர்வமாக அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கக்கூடிய ராகமாக இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.வி யோசித்த ஒரு பாடல் இது
இதுவரை யாரும் பயன்படுத்தாத ராகமாக இருக்க வேண்டும். அபூர்வமாக அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கக்கூடிய ராகமாக இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.வி யோசித்த ஒரு பாடல் இது
இந்திய சினிமாவின் முன்னணி பாடகராக இருக்கும் யேசுதாஸ், தான் பாடிய ஒரு பாடலை ரெக்கார்டிங்கில் கேட்டுவிட்டு கடுமையான கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். அந்த பாடல் என்ன? அவர் ஏன் கோபப்பட்டார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisment
1975-ம் ஆண்டு இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் அபூர்வ ராகங்கள். கமல்ஹாசன் ஸ்ரீவித்யா, மேஜர் சுந்தர்ராஜன், ஜெயசுதா ஆகியோர் நடித்த இந்த படம் நடிகர் ரஜினிகாந்தின் முதல் படமாகும். இந்த படத்தில் அவர் பாண்டியன் என்ற கேரக்டரில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடித்திருப்பார். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் வெளிவந்த ஒரு பெரிய ஹிட் பாடல் தான் ‘அதிசய ராகம், ஆனந்த ராகம் அபூர்வ ராகம்’ என்ற பாடல். இந்த பாடலை யேசுதாஸ் பாடியிருந்தார். இந்த பாடல் அபூர்வ ராகத்தில் அமைய வேண்டும் என்று கே.பாலச்சந்தர் சொல்ல, இது குறித்து எம்.எஸ்.விஸ்வநாதன் யோசித்துக்கொண்டே இருந்துள்ளார். அப்போது ஒரு பாடல் பாட வந்த பாலமுரளி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார் எம்.எஸ்.வி.
இதுவரை யாரும் பயன்படுத்தாத ராகமாக இருக்க வேண்டும். அபூர்வமாக அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கக்கூடிய ராகமாக இருக்க வேண்டும். அப்படி எதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் மகதி என்ற ராகத்தை பற்றி கூறியுள்ளார். இந்த ராகத்தை பாலமுரளி கிருஷ்ணா தான் கண்டுபிடித்துள்ளார். இந்த ராகத்தில் பாடல் எழுத வந்த கண்ணதாசனிடம், பாடலுக்காக சூழ்நிலையை சொல்லி, ராகத்தை பற்றியும் கூறியுள்ளார் எம்.எஸ்.வி.
Advertisment
Advertisements
எம்.எஸ்.வி சொன்னதை கேட்ட கண்ணதாசன், அதையே பாடலாக மாற்றியுள்ளார். அப்படி அவர் எழுதிய பாடல் தான் ‘அதிசய ராகம், ஆனந்த ராகம் அபூர்வ ராகம்’ என்ற பாடல். இந்த பாடலை தனது சிறப்பாக குரல் மூலம் கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். அந்த காலத்தில், சி.டி டிவிடி கேசட் இல்லாத சூழல் அதனால் ரெக்கார்ட் ப்ளேயர் தான் பயன்படுத்தியிருப்பார்கள். இதில் ஒரு பக்கம் 3 நிமிடங்கள் தான் ரெக்கார்டு செய்ய முடியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இதன் காரணமாக 5 நிமிடங்கள் கொண்ட பாடலை ரெக்கார்டிங் செய்ய, இடையில் இசையை நீக்குவது, பாடலின் ஓடும் நேரத்தை அதிகப்படுத்துவது போன்ற வேலைகளை செய்வார்கள். அந்த வகையில், இந்த அதிசய ராகம் பாடலை ரெக்கார்டிங் செய்யும்போது இடையில் இசையை நீக்கி, பாடல் ஸ்பீடாக ஓடி முடியும் வகையில் ரெக்கார்டிங் செய்துள்ளனர். இந்த பாடலை கேட்ட யேசுதாஸ் கடுமையாக கோபப்பட்டுள்ளார்.
ஒரு ரெக்கார்டடிங்கில் இருந்தபோது அந்த பாடலை ரெக்கார்டு செய்த கம்பெனி ஆட்கள் வந்துள்ளனர். அவர்களை பார்த்த யேசுதாஸ், ஏன் இப்படி பண்றீங்க, எவ்வளவு கஷ்டப்பட்டு பாடுகிறோம். முடிந்தால் சரியாக ரெக்கார்டு பண்ணுங்க இல்லனா விட்டுடுங்க என்று கண்டிபடி திட்டியுள்ளார்.