Advertisment
Presenting Partner
Desktop GIF

'அன்பே வா' படப்பிடிப்பு: எம்.ஜி.ஆர் செய்த சிறப்பான வேலை; ஒரு ஹீரோ வேலைக்காரன் ஆன கதை!

அன்பே வா படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் தனது தயாரிப்பாளருக்காக கம்பளியில் ஒளித்துக்கொண்டு பால் எடுத்து சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR SP Muthu

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹிட் படங்களில் ஒன்றாக நிலைத்திருக்கும் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான அன்பே வா திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை இயக்குனர் எஸ்.பி முத்துராமன் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வட இந்தியாவின் சிம்லாவில் படமாக்கப்பட்ட நிலையில், அங்கு குளிர் அதிகமா இருந்தால், படத்தின் தயாரிப்பாளராக ஏ.வி.எம்.சரவணனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவர் காரை விட்டு இறங்காமல்’, காரின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை சாத்திக்கொண்டு அதிலே ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்த அனைவரும் இடைவேளை நேரத்தில், டீ குடிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஏ.வி.எம்.சரவணனுக்கு உடல் நிலை சரியில்லாததை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், ஒரு ப்ளாஷ்கில் பால் வாங்கிக்கொண்டு கம்பளியில் வைத்துக்கொண்டு ஏ.வி.எம்.சரவணன் இருந்த காரின் கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த சரவணன், சார் இதையெல்லாம் நீங்கள் ஏன் செய்ய வேண்டும். வேலை ஆட்களிடம் கொடுத்து விட்டிருக்கலாமே என்று கேட்க, அவர்களிடம் கொடுத்துவிட்டால் நீங்கள் குடிக்க மாட்டீங்க, அதனால் தான் நானே எடுத்து வந்தேன். நீங்கள் இதை குடிக்க வேண்டும் என்று கூறி கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். இந்த தகவலை எஸ்.பி முத்துராமன் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment