கோவையில், பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், திடீரென ஒரு இளைஞரை தூக்கி வர சொல்லி மேடைக்கு பின்னால் வைத்து தாக்கியுள்ளார். ஏன் தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் பிரபலமாக அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பின்னரும், சினிமாவில் அவருக்காக எழுதப்பட்ட பல பாடல்கள் தேர்தல் பிரச்சாரத்திற் உதவியுள்ளன. அதேபோல், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்.ஜி.ஆர், தனது கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் இறுதியாக பேசி முடித்துவிட்டு, ஆண்கள் எல்லோரும் செல்லுங்கள, நான் தாய்மார்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லிவிடுவாராம்.
எம்.ஜி.ஆர் பேச்சை தட்ட முடியாத ஆண்கள் அங்கிருந்து வெளியேறியதும், பெண்களிடம், நீங்கள் கூட்டம் முடிந்தவுடன், எழுந்து சென்றால் கூட்டத்தில் முண்டியத்துக்கொண்டு ஓடி வருவார்கள் சிரமமாக இருக்கும் அதனால் தான், அவர்கள் சென்றபின் நீங்கள் போக வேண்டும் என்பதால், அவ்வாறு சொன்னேன். நீங்கள் அனைவரும் என் மனதில் இருக்கிறீர்கள். பத்திரமாக பாதுகாப்பாக சென்றுவாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைப்பாராம் எம்.ஜி.ஆர்.
Advertisment
Advertisement
அந்த வகையில் ஒருமுறை, கோவையில் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். தான் பேசிக்கொண்டு இருந்தாலும், என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்கும் எம்.ஜி.ஆர், தனது உதவியாளர்களிடம் கூட்டத்திற்கு நடுவே கண்ணை காட்டியுள்ளார். அவரது பார்வையை புரிந்துகொண்ட உதவியாளர்களும், கூட்டத்தில் சென்று ஒரு இளைஞரை அழைத்து வந்து மேடைக்கு பின்னால் அமர வைத்துள்ளனர்.
கூட்டம் முடிந்தவுடன், எம்.ஜி.ஆர் மேடைக்கு பின்னால் சென்று, அந்த இளைஞரை பளார் என்று அறைவிட்டுள்ளார். அரசியல் கூட்டத்திற்கு வந்து பெண்கள் மத்தியில் சில்மிஷமா செய்கிறாய். இனிமேல் உன்னை எந்த கூட்டத்திலும் பார்க்கவே கூடாது என்று அடித்து விரட்டி அனுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“