இளையராஜாவின் இசை மற்றும் குரலில் வெளியான ஒரு பாடல் பழம்பெரும் நடிகை பானுமதியை கவர்ந்த நிலையில், அவர் இளையராஜாவை பாராட்டி ஒரு வார்த்தை கூறியுள்ளார். அவர் என்ன சொன்னார்? அது என்ன பாடல் என்பதை பார்ப்போமா?
Advertisment
தமிழ் சினிமாவில், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, முதல் படத்தில் இருந்தே இசையில் முத்திரை பதித்து வருகிறார். இசை மட்டுமல்லாமல், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல திறமைகளுடன் வலம் வரும் இவர், தனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது.
அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் தாய் மூகம்பிகை. 1982-ம் ஆண்டு இயக்குனர் கே.ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், கே.ஆா.விஜயா, ஜெய்சங்கர், சிவக்குமார், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில், அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், காலம் கடந்து நிலைத்திருக்கிறது.
இந்த படத்தில் வரும் ‘ஜனனி ஜனனி என்ற பாடல், இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த பாடலை கம்போசிங் செய்த இளையராஜா டியூன் செய்தபோது, அதை கேட்ட கவிஞர் வாலி, உடனடியாக பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கான டியூனை கேட்டு, இசை யூடினிட்டடில் இருந்த அனைவரும் கண்ணீர் வடித்துள்ளனர். அதன்பிறகு அடுத்த நாள் பாடல் பதிவு நடைபெற இருந்துள்ளது. இந்த பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாட வேண்டும் என்று இயக்குனர் கே.சங்கர் முடிவு செய்துள்ளார்.
Advertisment
Advertisements
அந்த நேரத்தில் கே.ஜே.யேசுதாஸ் ஊரில் இல்லாததால், அடுத்து என்ன செய்வது என்று படக்குழு யோசிக்க, இளையராஜா பாடலை நான் பாடுகிறேன். கே.ஜே.யேசுதாஸ் வந்தவுடன், அவரது குரலில் பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதனை இயக்குனர் ஏற்றுக்கொண்ட நிலையில், இளையராஜா பாடலை பாடியுள்ளார். பாடலை பாடி முடித்தவுடன், யூனிட்டில் இருந்த அனைவரும் மெய்மறந்து கண்ணீர்விட்டுள்ளனர். இந்த தகவலை இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதே நிகழ்ச்சியில், பங்கேற்ற ஒருவர், இந்த பாடல், நடிகை பானுமதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல். இந்த பாடலை கேட்ட அவர், ராஜா உன்னை பற்றி எனக்கு பெரிய அவிப்ராயம் இல்லை. எல்லோரை போலவும் நீயும் ஒரு இசையமைப்பாளர் என்று தான் நினைத்தேன். ஆனால், இந்த ஜனனி ஜனனி பாடலை கேட்டவுடன், அந்த எண்ணம் மாறி என் தலை முழுவதும் நீதான் இருக்கிறாய் என்று சொன்னதாக இளையராஜாவிடம் கூறியுள்ளார்.