தமிழ் சினிமாவில் முதல்முறையாக ரீமிக்ஸ் பாடல் உருவாகியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் தாய்க்கு ஒரு தாலாட்டு. இது என்ன பாடல்? இந்த பாடலுக்கான நடந்த சம்பவங்கள் என்ன என்பதை பார்ப்போமா?
Advertisment
1986-ம் ஆண்டு பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் வெளியான படம் தாய்க்கு ஒரு தாலாட்டு. சிவாஜி கணேசன், பத்மினி, பாண்டியராஜன், விசு, ரோஹினி, பாக்கியலட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். இதில் சிவாஜி பத்மினி இருவரும் பாடும்படி வரும் ஒரு பாடல்தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட ஒரு பாடல்.
இவர்கள் இருவருமே தாய் தந்தையாக நடிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டதால், திரைப்படத்தில் இந்த காட்சிக்கு பாடல் தேவையில்லை என்று நினைத்துவிட்ட மலையாள இயக்குனராக பாலச்சந்திர மேனன் பாடல் குறித்து இளையராஜாவிடம் எதுவும் கேட்காமல் இருந்துள்ளார். ஆனால் இந்த இடத்தில் பாடல் வேண்டும் என்று முடிவு செய்த இசையமைப்பாளர் இளையராஜா, புதிய பறவை படத்தில் வரும் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ என்ற பாடலை ரீமேக் செய்துள்ளார்.
அதே சமயம் அந்த இசையை மட்டும் எடுத்துக்கொண்டு அதே பாடல் போன்ற ராகத்தில் வரிகளை மட்டும் மாற்றி பாடலை பதிவு செய்துள்ளனர். இந்த பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் ‘இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே’ என்று எழுதியிருப்பார். இந்த பாடலை டி.எம்.சௌந்திரரான் பி.சுசீலா பாடியிருந்தனர். இந்த பாடலை பாடுவதற்காக டி.எம்.எஸ் வந்தபோது பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
இளையராஜா தனது தொடக்க காலத்தில் டி.எம்.எஸ். குரலில் அதிக பாடல் பதவு செய்திருந்தாலும், இந்த பாடல் பாடுவதற்கு முன்பு 5 வருடங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் இந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில வருட இடைவெளிக்கு பிறகு டி.எம்.எஸ்.வந்ததால் இளையராஜாவே அப்போது பரபரப்பாக இருந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “