இன்றைய தமிழ் சினிமாவில், பல நட்சத்திர ஜோடிகள் இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர ஜோடி என்றால் அது கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள் ஜோடி தான். 1906-ம் ஆண்டு பிறந்த கிட்டப்பா 1927-ம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாளை திருமணம் செய்துகொண்டார். அடுத்து 6 வருடங்களே வாழந்த கிட்டண்ணா 1933-ம் ஆண்டு தனது 27 வயதில் மரணமடைந்தார்.
சினிமா பிரபலமாகாத காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் நாடகங்கள் தான் அவர்களின் பொழுதுபோக்காக இருந்தது. இப்போது சினிமா நடிகர்களை ரசிப்பது போல் அப்போது நாடக நடிகர் நடிகைகளுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் நாடக உலகின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நாடகங்களுக்கு அன்றைய காலக்கட்ட மக்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது, இவர்களின் நாடகங்களை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.
வெளியூர்களில் இருந்து வட்டி கட்டிக்கொண்டு பார்க்க வருவார்கள். இந்த நாடகத்தை மக்கள் கண்டு களிப்பதற்காக அப்போது இருந்த பிரிட்டீஷ் அரசு தனியாக ரயில் சேவையை தொடங்கியுள்ளது. கிட்டண்ணா ஸ்பெஷல் என்று அழைக்கப்படும் இந்த ரயில் அவர்களின் நாடகங்களை கண்டுகளிக்க செல்லும் மக்களுக்கு பெரிதும் பயன்பன்பட்டது. கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள் போட்ட நாடகத்தில் மிகவும் பிரபலமானது ஸ்ரீவள்ளி நாடகம். இந்த நாடகம் தொடர்ந்து பல நாட்களாக வெவ்வோறு ஊர்களில் நடந்துள்ளது.
இந்த நாடகங்களில் அவ்வப்போது சில புதுமைகளையும் செய்திருக்கிறார்கள். இந்த நாடகத்தில் முதல் நாள் வேடனாக கிட்டப்பா நடிக்க கே.பி.சுந்தராம்பாள் வள்ளியாக நடித்திருப்பார். அடுத்த 2 நாட்கள் கழித்து வேடனாக கே.பி சுந்தராம்பாளும், வள்ளியாக கிட்டப்பாவும் நடிப்பார்கள். இப்படி மாறி மாறி நடித்து அந்த நாடகத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இந்த நட்சத்திர ஜோடி தமிழகத்தில் மட்டுமல்லாமல் கடல் கடந்து இலங்கை மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நாடகங்கள் நடத்தி புகழ் பெற்றுள்ளனர்.
அன்று இந்த நாடங்களை ரசித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தான் பின்னாளில் சினிமா சின்னத்திரை தாண்டி தற்போது ஒடிடி பிளாட்பார்ம் வரை வந்து நிற்கிறது. இந்த கலையின் வடிவம் தான் மாறியிருக்கிறதே தவிர அதற்கு ஆதரவு தரும் ரசிகர்களின் ரசனை இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்று நடிகர் இயக்குனர் பத்திரிக்கையாளர் என பன்முற திறமை கொண்ட சித்ரா லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“