எம்.ஜி.ஆர் படம் வெற்றி பெற வேண்டும் என்று ஒற்றை காலில் நின்ற நடிகர் ஜெமினி கணேசனுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பெரிய மரியாத செய்துள்ளனர். அது என்ன படம்? ஜெமினிக்கு கிடைத்த மரியாதை என்ன?
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி சில வருட போராட்டத்திற்கு பின், ஹீரோவாக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு பல வெற்றிகளை குவித்த எம்.ஜி.ஆர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முக்கிய நடிகராக வலம் வந்தார். தான் நடிக்கும் படங்களில் எந்த முடிவாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் தான் எடுப்பார்.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த எம்.ஜி.ஆர், மக்கள், சக நடிகர்கள் என அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர். அதே சமயம் சக நடிகர்களில் நடிப்பை பாராட்டவும் எம்.ஜி.ஆர் தயங்கியதில்லை. அந்த வகையில் ஜெமினி கணேசனின் படத்தை பார்த்து அவரை பாராட்டிய எம்.ஜி.ஆர் நாம் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேவர் வந்து கதை சொல்வார். பிடித்திருந்தால் சேர்ந்து நடிக்கலாம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
அதன்படி சின்னப்ப தேவர் ஜெமினி கணேசனை சந்தித்து கதை கூறியுள்ளார். கதையை கேட்ட ஜெமினி கணேசன், கதை நன்றாக இருக்கிறது. எனது கேரக்டரும் ஓகே தான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரும் ஜெமினியிடம் படததில் நடிக்க உங்களுக்கு சம்மதமா? உங்கள் கேரக்டர் பிடித்திருக்கிறதா? கதை பிடிததிருக்கிறதா என்று கேட்டுள்ளார். ஜெமினியும் கதை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல படம் தயாராகியுளளது. அந்த படம் தான் முகராசி.
எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஜெமினி கணேசனுடன், ஜெயலலிதா ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு ஒரு வகையில் ஜெமினியின் பேச்சும் ஒரு காரணம் என்று சொல்லலாம். முகராசி படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது, அந்த பகுதியில், ஜெமினி கணேசனின் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது அந்த தியேட்டர் ஓனர், முகராசி படம் ஓடுகிறது. வந்து பார்த்துவிட்டு ஏதாவது பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிடி, படத்தை பார்த்த ஜெமினி கணேசன், படம் வெற்றி பெறுவதற்காக நான் ஒற்றை காலில் நிற்கிறேன். படத்திலும் எனக்கு ஒற்றை கால் தான். இந்த படத்தில் ஒற்றை காலலுடன் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்திருக்கிறேன். இந்த படம் வெற்றி பெற இன்றுவரை ஒற்றைக்காலில் நிற்கிறேன் என்று கூறியுள்ளார். ஜெமினியின் பேச்சு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பேசி முடித்துவிட்டு, ஜெமினி காரில் ஏற சென்றபோது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை அலேக்காக தூக்கியுள்ளனர்.
எங்கள் தலைவரின் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒற்றை காலில் நிற்கிறீர்கள். ஆனால் அந்த ஒற்றைக்காலும் தரையில் பட கூடாது. அதனால் உங்களை நாங்கள் அலேக்காக தூக்கிவிட்டோம் என்று சொல்லி, அவரை தூக்கிக்கொண்டு காரில் உட்கார வைத்துள்ளனர். இந்த தகவலை ஓ.எச்.சினிமா யூடியூப் சேனலில், சபீதா ஜோசப் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“