க்ளாசிக் சினிமாவின் பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர் தனது போட்டி நடிகரான சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகை சரோஜா தேவி மீது கோபப்பட்ட சம்பவம் அன்றைய காலக்கட்டத்தில் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர் தற்போது இல்லை என்றாலும் அவர் தொடர்பான புதிய தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 1964-ம் ஆண்டு வெளியான தெய்வத்தாய் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமாக தகவல்கள் குறித்து பார்ப்போம்.
எம்.ஜி.ஆர் அரசியல் சினிமா என ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரிடம் கணக்காளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் தெய்வத்தாய் என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக சரோஜா தேவியை புக் பண்ணுமாறு எம்.ஜி.ஆர் சொல்ல ஆர்.எம்.வீரப்பனும் அப்படியே செய்கிறார். 1960 காலக்கட்டம் சிவாஜியை சுற்றி சினிமா கூட்டம் அதிகமாக இருந்த காலக்கட்டம்.
இதனால் சிவாஜிக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர் மாதவனை அழைத்து தெய்வத்தாய் படத்தை இயக்குமாறு கூறுகிறார் ஆர்.எம்.வீரப்பன். அதன்படி இயக்குனர் மாதவன் படத்தை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பின்போது முதல் நாள் அனைவரும் தயாராக இருக்கும்போது நாயகி சரோஜா தேவி வரவில்லை. அப்போது சிவாஜியின் புதிய பறவை படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதனால் டென்ஷன் ஆன எம்ஜி.ஆர். ஆர்.எம்.வீரப்பனிடம், எனது காட்சிகளளை இப்போது எடுங்கள். அவர் வந்தவுடன் அவரது காட்சிகளை தனியாக எடுத்து சேர்த்துவிடுங்கள் என்று சொல்ல, ஆர்.எம்.வீரப்பனோ, இயக்குனர் மாதவனுக்கு டென்னிக்கல் பற்றி எதுவும் தெரியாது அவர் ஆர்டராகத்தான் எதையும் எடுப்பார். அதனால் தயவு செய்து நடித்துக்கொடுங்கள் என்று கேட்க எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொள்கிறார்.
அதன்பிறகு சரோஜா தேவி தாமதமாக வர எம்.ஜி.ஆர் தனது கோபத்தை காட்டிக்கொள்ளாமல் படத்தில் நடித்து முடிக்கிறார். அடுத்து படத்தின் ரீ-ரெக்கார்டிங்கில் ஒரு கத்தி வீசும் காட்சி நான் இல்லாமல் ரீ-ரெக்கார்டிங் செய்யக்கூடாது என்று இயக்குனர் மாதவனிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் சென்றுவிடுகிறார். வெகு நேரமாகியும் எம்.ஜி.ஆர் வராத நிலையில், காத்திருந்து பார்த்த இயக்குனர் மாதவன் அந்த காட்சிக்கு ரீ-ரெக்கார்டிங் முடித்துவிடுகிறார், அப்போது வந்த எம்.ஜி.ஆர் இது என் படம் நான் சொல்லிவிட்டு தானே போனேன் அதற்குள் எதுக்கு இப்படி செய்தீர்கள் என்று கோபமடைந்தார்.
அதன்பிறகு படம் வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றி பெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரோஜா தேவி சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால், எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது .இதனால் இவர்கள் இருவரும் இனி இணைந்து நடிக்கப்போவதில்லை என்ற கருத்து பரவியதால் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் இந்த படம் 100 நாட்கள் ஓடியிருந்தாலும், அப்போது எம்.ஜி.ஆர் வெற்றி விழா கொண்டாடாத நிலையில், மக்கள் அரிசி இல்லாமல் பஞ்சத்தில் இருப்பதால் இந்த விழா வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் அதே ஆண்டு வெளியான வேட்டைகாரன் படத்திற்காக சின்னப்ப தேவர் கொடுத்த கேடயத்தை பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர் நினைத்தால் ஒருவரை உயர்த்தவும் செய்வார் ஒருவரை தாழ்த்தவும் செய்வார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.