Advertisment

வசனத்தை தவறாக பேசிய எம்.ஜி.ஆர்... சத்தம் போட்ட இயக்குனர் : படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யம்

1918-ம் ஆண்டு பிறந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
MGR Stylish

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும்,  தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களின் அனைத்து முடிவுகளையும் தானே எடுப்பவர் என்றாலும், கூட ஒரு வசனத்தை மாற்றி பேசியதால், இயக்குனரிடம் திட்டு வாங்கியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்தக்கொண்டு இன்றும் பலராலும் கொண்டாப்படக்கூடிய ஒரு தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர். 1918-ம் ஆண்டு பிறந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பே பல நாடகங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.

அதே சமயம் கிடைத்த வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பல சமயங்களில், பசி பட்டினியை அனுபவித்தவர் என்பது பலரும் அறிந்திராத ஒரு உண்மை. 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தில் தான் எம்.ஜி.ஆர் தனி நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு 1956-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர் நிறுவனம் தயாரித்திருந்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில்  எம்.ஜி.ஆர் பானுமதி இணைந்து நடித்திருந்தனர். மாடர்ன் தியேட்டர் சார்பில் டி.ஆர்.சுந்தரம் இந்த படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

நடிகர் நடிகைகளிடம் கண்டிப்பாக இருக்கும் டி.ஆர் சுந்தரம், நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் படக்குழுவினரிடம் அதட்டி வேலை வாங்குவதில் ரொம்பவும் கராராக நடந்துகொள்வார். அவர் முன்பு யாரும் அமர்ந்து கூட பேசமாட்டார்கள். நடிகர்களை அடக்கி ஆளும் குணம் கொண்ட இவர் கராராக வேலை வாங்குவார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில், அல்லா மீது ஆணையாக என்று சொல்ல வேண்டும்.

ஆனால் அப்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததால், தனது பகுத்தறிவு சிந்தனையின் காரணமாக அந்த வசனத்தை பேச மனமில்லாமல், வசனத்தை மாற்றி தர முடியுமா, என்று கேட்டுள்ளார். இதை கேட்ட வசனகர்த்தா, நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ஆர்.சுந்தரத்திடம் பேச தயங்கிய எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தொடங்கியபோது, அல்லா மீது ஆனையாக என்பதற்கு அம்மாவின் மீது ஆணையாக என்று மாற்றி கூறியுள்ளார்.

உடனே கோபப்பட்ட டி.ஆர் சுந்தரம், கட் என்று சொல்லிவிட்டு அலிபாபாவுக்கு எல்லாமே அல்லாதான் என் இஷ்டத்துக்கு வசனத்தை மாற்ற கூடாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு அவர் சொன்னபடியோ பேசி நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரப்பாக போட்டு பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர் தனது நண்பர்களுடன் பார்க்க சென்றிருக்கிறார். ஆனால் டி.ஆர்.சுந்தரம் நீ மட்டும் வா.. உன்னுடன் வர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். அப்போது தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார் எம்.ஜி.ஆர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment