தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு இசையமைத்த பெருமைக்கு சொந்தக்காரரான இளையராஜா, தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால் இவர் சினிமாவில் அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சினிமாவில், மனிதனின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்களம் மூலம் ஆறுதல் கூறியவர் தான் கவியரசர் கண்ணதாசன். பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கைள கொடுத்துள்ள கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும் ஆழமான கருத்துக்களை கொண்ட பல பாடல்களை கொடுத்துள்ளார். கவிஞர் இசையமைப்பாளர் என்பதை தாண்டி எம்.எஸ்.வி – கண்ணதாசன் இடைய நெருங்கிய உறவும் இருந்தது.
இவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்த அதே நேரத்தில் அவ்வப்போது மோதலும் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒருநாள் கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாச்சலம் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கச்சேரி நடைபெறுவதாக இருந்துள்ளர். அந்த சமயத்தில் கண்ணதாசனுடன் மோதலில் இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், இந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை.
அதே சமயம் இந்த நிகழ்ச்சிக்கு கச்சேரி நடத்த போக கூடாது என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சங்கர் – கணேஷ் இருவரையும் தடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாக தொடங்கியது. இந்த செய்திகள் பஞ்சு அருணாச்சலத்தின் மனதை மிகவும் பாதித்துள்ளது. அதன்பிறகு தான் திரைக்கதை எழுதிய கல்யாணமாம் கல்யாணம் என்ற படத்திற்கு அப்போது உச்சத்தில் இருந்த எம்.எஸ்.வி சங்கர் – கணேஷ் இருவரையும் விட்டுவிட்டு கன்னடத்தில் இருந்து விஜயபாஸ்கர் என்பவரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பிறகு பஞ்சு அருணாச்சலம் கதை திரைக்கதை எழுதிய பல படங்களுக்கு விஜயபாஸ்கர் தான் இசையமைத்திருந்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் இளையராஜாவை தனது படங்களில் இசையமைக்க அறிமுகப்படுத்துகிறார். அந்த வகையில், 1976-ம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதிய அன்னக்கிளி படத்தின் மூலம் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் என்றோ ஏற்படுத்திய ஒரு காயம் 2 இசையமைப்பாளர்களை பஞ்சு அருணாச்சலம் தமிழுக்கு கொடுக்க ஒரு ஊன்றுகோளாக அமைந்தது என்று சொல்லலாம். இந்த தகவலை பத்திரக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“