கவிஞர் வாலி எழுதிய பாடலில் நிலவை ஆண் என்று வர்ணித்து எழுதியதால், இது தவறு என்று கவிஞர் கண்ணதாசன் சொல்ல, அதற்கு வாலி தனக்கே உரிதான பாணியில் பதில் கூறியுள்ளார்.
கடந்த 1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் எங்கவீட்டு பிள்ளை. சாணக்யா இயக்கிய இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பூஜையின் போது பாடல் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால், கவிஞர் வாலி எழுதிய பாடல்களை பதிவு செய்கின்றனர்.
அப்போது வாலி எழுதிய அப்போது இந்த படத்தில் நாயகியான சரோஜா தேவி, எம்.ஜி.ஆரை நினைத்து பாடல் பாடுவது போன்ற ஒரு காட்சிக்கு, அவன் ஒரு நிலவோ என்று பாடல் எழுதுகிறார். இந்த பாடல் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒருநாள் கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலை கேட்கிறார். அப்போது நிலவை பெண் என்று தான் கூறுவார்கள் வாலி என்ன ஆண் என்று அப்பத்தமாக எழுதியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஸ்.விஸ்வநாதன் இதை வாலியிடம் சொல்ல, சில நாட்கள் கழித்து இயக்குனர் ஸ்ரீதரின் அலுவலகமாக சித்ராலயாவில் வாலி கண்ணதாசன் எம்.எஸ்.வி ஆகியோர் சந்திக்கின்றனர். அப்போது கண்ணதாசனிடம் வாலி அந்த பாடல் குறித்து கேட்க, அதற்கு கண்ணதாசன் ஆமாம் அந்த பாடல் அபத்தமாகத்தான் உள்ளது. நிலவை பெண் என்று தான் சொல்வார்கள் என்று சொல்கிறார்.
இதை கேட்ட வாலி, நிலவை ஆணோடு ஒப்பிட்டு நீங்களே ஒரு பாடல் எழுதி இருக்கீங்க என்று சொல்லி, குலமகள் ராதை படத்தில் ஒரு பாடலில் பகலிலே சந்திரனை பார்க்க போனேன். அவன் இரவிலே வருவதாக சொன்னான் என்ற பாடலை கூறுகிறார். இதை கேட்ட கண்ணதாசன் இந்த படத்தில் ஹீரோ சிவாஜியின் பெயர் சந்திரன் அதனால் அப்படி எழுதினேன் என்று சொல்கிறார்.
இதற்கு பதிலடியாக புராணத்தில் பொய்யா மொழி கவிஞர் ஒரு தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அரசவையில் புகார் கூறுவார். அப்போது பொய்யாமொழி கவிஞர் இது உண்மையில்லை என்று சொல்ல, அரசரும் இதற்கு சாட்சி இருக்கிறதா என்று கேட்க, நிலவுதான் சாட்வி என்று பொய்யாமொழி கவிஞர் சொல்கிறார். அதற்கு அரசர் நிலவை வர சொல்ல, அதற்காக பொய்யாமொழி கவிஞர் பல பாடல்களை பாடி நிலவை வரவழைக்கிறார். அப்போது நிலவு ஆண் வேடத்தில் வந்து தான் சாட்சி சொல்லும்.
அதேபோல் நவகிரகத்தில் ஒரு ஆணைத்தான் சந்திரனாக வைத்திருப்பார்கள். பெண்களை பூ என்று குறிப்பிடுகிறோம். அப்படி அல்லிப்பூ இரவில் சந்திரன் வந்த பிறகு தான் பூக்கும். அப்படி பார்த்தால் ஆண் வந்தால் தான் பெண் பூக்கும் என்று வாலி பதில் சொல்கிறார். இதை கேட்ட கண்ணதாசன் ஒப்புக்கொண்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“