Advertisment

சொந்தப் படத்தை தியாகம் செய்து... சிவாஜி ஹீரோவா ஜெயிக்க அஞ்சலி தேவி செய்த உதவி

பராசக்தி படத்திற்கு முன்பே சிவாஜி நடித்த முதல் படம் தாமதமாக வெளியாகி தோல்வியை சந்தித்து.

author-image
WebDesk
Oct 11, 2023 10:49 IST
New Update
Sivaji Anjali devi

சிவாஜி - அஞ்சலி தேவி

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் பலரும் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் குறைந்து ஹீரோவியின் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தங்கள் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதில் குறிப்பாக த்ரிஷா அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் 35 வயதை கடந்த பின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றனர்.

Advertisment

ஆனால் திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் இருக்காது என்பதை உடைத்து எறிந்தவர் க்ளாசிக் சினிமாவின் முன்னணி நாயகி அஞ்சலி தேவி. 1927-ம் ஆண்டு ஆந்திராவின் பீடபுரம் என்ற ஊரில் பிறந்த இவர், 1947-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குலாம்பாமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டு மகாத்மா உடன்கர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அஞ்சலி தேவி, தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தாயான பின்னரும் அஞ்சலி தேவி பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அதேபோல் சினிமாவில் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை போல் வேறு எந்த நடிகைக்கும் கிடைத்ததில்லை என்பதால், அவரு ஒரு அதிஷ்டசாலி என்று பலரும் கூறுவது உண்டு.

அஞ்சலி தேவி தொடக்கத்தில், நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரது நாடகத்தை தவறாமல் பார்க்க வரும் ஆதி நாராயணராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கவிஞராக இருந்த ஆதி நாராயணராவ், தனியாக நாடக குழுவும் நடத்தி வந்துள்ளார். இவரின் தெருப்பாடகன் உள்ளிட்ட சில நாடங்களில் அஞ்சலி தேவி நடித்து அந்த நாடகங்கள் பெரிய அளவில் பாராட்டுக்களையும் வெற்றிகளையும் குவித்தது.

அஞசலி தேவிக்கு திருமணமான உடன் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து. அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கியவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத். படத்தின் பெயர் கஷ்டஜீவி. ஆனால் இந்த படம் கடைசிவரை வெளியாகவில்லை. அதன்பிறகு மீண்டும் நாடகங்களுக்கு சென்ற அஞ்சலி தேவிக்கு அடுத்து குழந்தைகள் பிறந்தது. அதன்பிறகு பல நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் புல்லையா ஒருநாள் அஞ்சலி தேவியின் நாடகத்தை பார்த்துள்ளார். இதில் அஞ்சலி தேவியின் நடிப்பு அவரை பெரிதும் கவர்ந்ததால் தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கிறார்.

ஆனால் முதல் படம் வெளியாகவில்லை என்பதால், அஞ்சலி தேவி இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தாலும் அவரது கணவர் ஆதி நாராயண ராவ் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விருப்பபடுகிறார். அதன்பிறகு அவ்த படவாய்ப்பை ஏற்றுக்கொண்டு அஞ்சலி தேவி நடிக்கிறார். அந்த படம் தான் குலாம்பாமா. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக மாறியதை தொடர்ந்து அஞ்சலி தேவிக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து சர்வாதிகாரி என்ற படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்த அஞ்சலி தேவி, அதன்பிறகு அஞ்சலி பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதில் முதல் படமாக தமிழில் பூங்கோதை என்ற படத்தை தனது முதல் படத்தை இயக்கிய இயக்குனர் எல்.வி.பிரசாத்தின் இயக்கத்தில் தயாரித்து நடிக்கிறார் அஞ்சலி தேவி. இந்த படத்தில் 2-வது நாயகன் கேரக்டருக்கு ஒரு நடிகர் தேவைப்பட்டார்.

அப்போது தான் சென்னையாப்பிள்ளை கணேசன் (சிவாஜி) என்பவரை அஞ்சலி தேவிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் நேஷ்னல் பிச்சர்ஸ் அதிபர். முதலில் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் மட்டும் தான் சிவாஜி நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் தெலுங்கில் நடிக்க சரியான ஆல் இல்லாததால் தெலுகிலும் சிவாஜியே நடித்திருந்தார். அதே காலக்கட்டத்தில் சிவாஜியை வைத்து பராசக்தி என்ற படத்தையும் நேஷ்னல் பிச்சர்ஸ் தொடங்கியது.

ஆனால் பராசக்தி படத்தில் சிவாஜி நடிக்க அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனமே சம்மதிக்காததால் பெரிய பிரச்சனை இருந்தது. ஆனால் பூங்கோதை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனால் பூங்கோதை திரைப்படம் வெளியாக இருக்கும் நேரத்தில் அஞ்சலி தேவியை சந்தித்த பராசக்தி படத்தின் தயாரிப்பாளரான நேஷ்னல் பிச்சர்ஸ் அதிபர், சிவாஜியின் நடிப்பு மீது அபார நம்பிக்கை உள்ளது. பூங்கோதை படம் வெளியானால் அவரது ஹீரோ இமேஜ்க்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

அதனால் பராசக்தி படம் சிவாஜி நடித்த முதல் படமாக வெளியானால், நிச்சயமாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக சிவாஜி இடம்பிடிப்பார் என்று கூறியுள்ளார். அதனை அஞ்சலி தேவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பராசக்தி படம் 1952-ல் அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைக்கிறது. அவர் நடித்த முதல் படமாக பூங்கோதை 1953-ம் ஆண்டு வெளியாகி தோல்வியை சந்தித்து.

தனது நஷ்டத்தை பொருட்படுத்தாமல் சிவாஜி நாயகனாக நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கு வழி விட்ட அஞ்சலி தேவிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விழித்த சிவாஜி, காலங்கள் கடந்து அஞ்சலி தேவிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment