டி.ராஜேந்தர் இசையமைத்து இயக்கிய உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் ஒரு சிறந்த பாடலை தனக்கு கொடுக்கவில்லை என்று கூறி எஸ்.பி.பாலப்பிரமணியன் இயக்குனர் டி.ராஜேந்திரிடம் கோபமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் தான் டி.ராஜேந்தர். ஒரு தலைராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
அதேபோல் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான். 1980-90 காலக்கட்டங்களில் இவரது படங்கள் வெளியாவது, இவரது படங்களின் இசை வெளியீட்டு விழா நடப்பது என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தனது படங்கள் மட்டுமல்லதமல், மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள ராஜேந்தர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
டி.ராஜேந்தர் இசையில் பல பாடகர்கள் ஹிட் பாடல்களை பாடியிருந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், டி.ராஜேந்தர் படத்தில் பாடல் தனக்கு கொடுக்கவில்லை என்று அவரிடம் கோபமாக பேசியுள்ளார். 1983-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கம், தயாரிப்பு, நடிப்பு மற்றும் இசையில் வெளியான படம் உயிருள்ளவரை உஷா. சரிதா, கங்கா ராதாரவி, நளினி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இதில் 3 பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருந்த நிலையில், மலேசியா வாசுதேவன், டி.எம்.சௌந்திரராஜன் ஆகியோர் பாடியிருந்த நிலையில், ‘வைகை கரை காற்றே நில்லு’ என்ற பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இந்த பாடலை கேட்ட எஸ்.பி.பி, இந்த பாடல் அவருக்கு கொடுத்துட்டீங்களே எனக்கு இல்லையா என்று கோபித்துக்கொண்டுள்ளார்.
அதன்பிறகு பாலு அண்ணே கோவிச்சிக்காதீங்க. இந்த படத்தை தெலுங்கில் கொடுத்துள்ளேன். அதில் இந்த பாடலை பாலு அண்ணன் தான் பாட வேண்டும் என்று எழுதி கொடுத்துள்ளேன் என்று டி.ஆர்.அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“