தமிழ் சினிமாவில் தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் டி.எம்.எஸ்.தான். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு திரையில் அவர்களே பாடுவது போன்ற பிம்பத்தை உருவாக்கி தனது குரலில் வித்தியாசத்தை காட்டிய டி.எம்.சௌந்திரராஜன், எம்.எஸ்.வி இசையில் ஒரு பாடலை பாட, 10 டேக்குகளுக்கு மேல் வாங்கி இருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
இலங்கை - இந்தியா கூட்டு தயாரிப்பில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான படம் பைலட் பிரேம்நாத். சிவாஜி கணேசன், விஜயகுமார், ஜெய்சித்ரா, ஜெய்கணேஷ், மாலினி, தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். ஏ,சி.திரிலோகச்சந்தர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற ''இலங்கையின் இளம்குயில்'' என்ற பாடலை டி.எம்.சௌந்திரராஜன் - வாணி ஜெயராம் இணைந்து பாடியிருந்தனர். எப்போதுமே ஒரு பாடல் பதிவின்போது, ரெடி ஒன் டூ த்ரி ஃபோர் டேக் என்று சொல்லித்தான் பாடல் பாட ஸ்டார் செய்வார்கள். ஆனால் இந்த பாடல் பதிவின்போது அப்படி ஒன்றும் இல்லை. பின்னணி இசை வருவதற்கு முன்பிருந்தே பாட தொடங்க வேண்டும் என்பதால், எம்.எஸ்.வி நான் டேக் என்று சொன்னவுடன் பாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி எம்.எஸ்.வி டேக் என்று சொல்ல, டி.எம்.எஸ் பாடாமல் அப்படியே நின்றுள்ளார். இதன்பிறகு அடுத்த டேக் சொல்ல அப்போவும் பாட முடியாமல் டி.எம்.எஸ்.நிற்க, இப்படியே 10-20 டேக் வரை சென்றுள்ளது. இதனால் கடுப்பான எம்.எஸ்.வி, டி.எம்.எஸை கண்டபடி திட்டியுள்ளார். பக்கத்தில் இருந்த வாணி ஜெயராம் பயத்தில் இருந்துள்ளார். அதன்பிறகு ஒருவழியாக பாடி முடித்து வெளியில் வந்த டி.எம்.எஸிடம் வாணி ஜெயராம் கேட்டுள்ளார்.
சார் அவர் அந்த அளவுக்கு திட்டுகிறார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்க, அவர் திட்டினாரா?எனக்கு கேட்கவே இல்லையே நான் யாருக்கு பாடல் பாடினேனோ அந்த கேரக்டராக உள்ளே இருந்தேன் மா அவர் திட்டியது எனக்கு கேட்கவில்லை என்று பதில் அளித்துள்ளார் டி.எம்.எஸ். இந்த தகவலை டி.எம்.எஸ். குறித்து ஆவணப்படம் ஒன்றை இயக்கிய இயக்குனர் விஜயராஜ் என்பவது கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil