Advertisment
Presenting Partner
Desktop GIF

இது பாட்டு எழுதி மெட்டு போட்டதா? எஸ்.பி.பி மிகவும் வியந்த கண்ணதாசன் பாடல்

எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியில் வந்த ஒரு பாடலை பாடகர் எஸ்.பிபி, டியூன் அமைத்து எழுதியதா? அல்லது எழுதி டியூன் அமைத்ததா என்று சந்தேகம் கேட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
MSV SPB Kavi

பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் டியூன் அமைக்கப்பட்டு எழுதப்பட்டதா அல்லது எழுதி முடித்தபின் டியூன் போடப்பட்டதா என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கேட்க, எம்.எஸ்.விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில், கடந்த 1977-ம் ஆண்டு வெளியான படம் பட்டிண பிரவேசம். டெல்லி கணேஷ், ஜெய் கணேஷ், சிவச்சந்திரன், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கின்போது, ஒரு சுச்சிவேஷனுக்காக எம்.எஸ்.வி போட்டி டியூன் மிகவும் பிடித்து போக, இந்த டியூனை விடக்கூடாது. இதற்கே பாடல் எழுதி வாங்கிவிடு என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன், கம்போசிங் அறைக்கு வருகிறார். அதற்கு முன்பே இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி சிறப்பாக டியூன் போட்டிருக்கிறார் என்று கண்ணதாசன் தெரிந்து கொண்டுள்ளார்.

வந்தவுடன் என்னடா இந்த பாட்டுக்கு சிறப்பா டியூன் போட்ருக்கியாமே எங்கே வாசி பாப்போம் என்று சொல்ல, எம்.எஸ்.வியும், தத்தகாரத்தில் ல லலா லலா என்று டியூனை வாசித்துள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், இப்படி பாடினால் நான் வார்த்தைக்கு எங்கடா போறது என்று கேட்க கண்ணதாசன், இதற்கு பாட்டு எழுத முடியாது என்று கூறியுள்ளார். இதனால் கோபமான எம்.எஸ்.வி, அதன்பிறகு கண்ணதாசனை தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

என்ன கவிஞர் நீ இதுக்கு பாடல் எழுத முடியாதா? ஒரே சந்தத்தை வைத்து எத்தனை பாடல் போட்டிருக்கிறோம். இந்த டியூனுக்கு பாட்டு எழுத முடியாது என்று சொன்று சொல்கிறாயே நீ என்ன கவிஞர் என்று கேட்டுள்ளார். என்னடா இந்த பையன் ரொம்ப இன்சல்ட் பண்றானே என்று யோசித்த கண்ணதாசன், பாடல் எழுத தயாராகி வெளியில் வந்துள்ளார். என்ன பேச்சு பேசுற நீ, டியூனை வாசிடா என்று கண்ணதாசன் எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார். அதன்படி எம்.எஸ்.வி வாசிக்க, எழுதிக்கடா என்று சொல்லிவிட்டு ‘’வா நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா’’ என்று பாடியுள்ளார்.

இந்த பாடல் முழுவதும் லாலா லாலா என்று முடிவது போலவே வார்த்தைகளை அமைத்திருப்பார். பாடல் முடிந்தவுடன் கவிஞரே என்று எம்.எஸ்.வி அழைக்க, என்னடா என்று கண்ணதாசன் கேட்டுள்ளார். அப்போது இந்த ஃபாதர் இன் லா, மதர் இன் லா ஃபிரதர் இன் லா இதை விட்டுட்டீங்களே என்று எம்.எஸ்.வி விளையாட்டாக கேட்டதாக ஒரு நிகழ்ச்சியில் எம்.எஸ்.வி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
msv Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment