தமிழ் சினிமாவில் தனது இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். பல இயக்குனர்களிடம உதவி இயக்குனராக வேலை செய்து, 1990-ம் ஆண்டு வெளியா புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இவர், அதனைத் தொடர்ந்து, சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் ஆரம்ப காலக்கட்டத்தில் இயக்கிய படங்களில் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் நாட்டாமை. சரத்குமார், குஷ்பு, மீனா, மனேராமா, விஜயகுமார் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்கள் நடித்த இந்த படத்தில் பொன்னம்பலம் வில்லனாக நடித்திருந்தார். 1994-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார்.
இந்த படத்தில் மகன் கவுண்டமணிக்கு அப்பாவாக செந்தில் நடித்திருந்தார். கவுண்டமணி தனது அம்மாவை கேட்டு செந்திலை தொல்லை செய்வது போலவும், பல இடங்களில் செந்தில் தனது மகனுக்காக பொண்ணு பார்க்க போவது போல அமைக்கப்பட்டுள்ள காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தில், நடித்த அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்காமலே ஒருவர் பிரபலமாகியுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை. மிக்சர் மாமா தான். கவுண்டமணி ஒரு இடத்திற்கு பெண் பார்க்க செல்வார். அந்த பெண் தனக்கு பொருத்தமாக இருப்பார் என்று கவுண்டமணி ஓகே சொன்னாலும், பெண்ணின் அம்மா கவுண்டமணி அப்பா செந்திலின் மனைவி என்று தெரியவந்துவிடும். இதனால் அந்த பெண் கவுண்டமணிக்கு தங்கை முறையாகிவிடும். இதனால் கடுப்பாகும் அவர் செந்திலிடம் சண்டைபோடுவார். இந்த காட்சியில் ஒருவர் எதுவும் பேசாமல் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்.
அவர், கே.எஸ்.ரவிக்குமார் யூனிட்டில், எலக்ட்ரிஷனாக பணியாற்றியுள்ளார். எந்த வேலையும் செய்யாமல், பொறி வேர்கடலை என யூனிட்டில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்ட இவரை இந்த காட்சியில் பயன்படுத்தலாம் என்று கூறி அவரை அழைத்துள்ளார். அப்போது அவர் தனக்கு நடிக்க வராது என்று சொல்ல, நீ அங்க பொறி, கடலை எல்லாம் சாப்பிடுவல்ல, அதே மாதிரி இங்க மிக்சர் சாப்பிடு என்று சொல்ல, அதே மாதிரி அவரும் செய்துள்ளார். அந்த காட்சி இன்றைக்கு பார்க்கும்போது அந்த மிக்சர் மாமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“