Advertisment

2 நாள் ஷூட்டிங்குடன் நின்ற படம்... கலங்கி அழுத எம்.ஜி.ஆர் : என்ன நடந்தது?

இயக்குனர் சொன்ன கதையை கேட்டு எம்.ஜி.ஆர் கலங்கி அழுத நிலையில், 2 நாட்கள் படப்பிடிப்புடன் அந்த படம் நின்றுபோனது. அதன்பிறகு ஜெமினி கணேசன் நடிப்பில் அந்த படம் வெளியானது.

author-image
WebDesk
New Update
MGR Crying

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

க்ளாசிக் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வந்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன். சிவாஜிக்கு முன்பே எம்ஜி.ஆர் திரைத்துறையில் அறிமுகமாகிவிட்டாலும் இருவரும் சமகாலத்தில் ஹீரோக்களாக என்ட்ரி கொடுத்தனர். அதன்பிறகு இருவரும் மாறி மாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், 1954-ம் ஆண்டு வெளியான கூண்டுக்கிள என்ற ஒரு படததில் மட்டும் இணைந்து நடித்திருந்தனர்.

Advertisment

இந்த படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் – சிவாஜி என இருவரின் ரசிகர்களும் தியேட்டரில் மோதலில் ஈடுபட்டதால், படம் திரையிடல் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போதுவரை இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சிவாஜி இருவம் இணைந்து நடிக்கவில்லை.

அதே சமயம் சிவாஜி ஒப்புக்கொண்டு, எம்.ஜி.ஆர் நடிப்பில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அதன்பிறகு இந்த படத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல புதுமையான கதைகளத்தை படமாக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷண்ன். இவரின் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்த காலக்கட்டத்தில சிவாஜிக்கு இவர் கதை கூறியுள்ளார்.

இந்த கதையில் நடிக்க சிவாஜி கணேசன் ஒப்புக்கொண்டாலும், அதன்பிறகு சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போய்விடுகிறது. அடுத்து எம்.ஜி.ஆரிடம் கதை சொல்ல, ஒரு தயாரிப்பாளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அழைத்து செல்கிறார் சிவாஜியிடம் சொன்ன அதே கதையை சிறிய மாற்றத்துடன் எம்.ஜி.ஆருக்கும் கூறியுள்ளார். இந்த கதையை கேட்ட எம்.ஜி.ஆர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

ஒரு ஏழை விவசாயி. தனது மனைவி பெறாத பிள்ளையுடன் சந்தோஷமாக இருக்கும்போது திடீரென மனைவி இறந்துவிடுகிறாள். அதன்பிறகு விவசாயின் மாமனார் தனது மருமகனை 2-வது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார் என்று அவர் சொன்னதும் எம்.ஜி.ஆருக்கு தனது முதல் மனைவி ஞாபகம் வந்து அழுதுள்ளார். அதன்பிறகு இந்த படம் தொடங்கப்பட்டு 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படப்பிடிப்பின்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு ஈடுபாடே இல்லாமல் இருந்ததை பார்த்த எம்.ஜி.ஆர் அவரை விசாரித்தபோது இந்த படத்தில் உங்களது மாமனார் கேரக்டரில் நடிக்க வந்த நடிகர், படத்தின் இயக்குனர் காட்சியை இயக்கிய விதம் இரண்டுமே பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் மாமனார் கேரக்டரில் யார் நடிக்க வேண்டும் என்று கேட்க, எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒருவர் என்று கூறியுள்ளர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர் மாதிரி என்ன அவரே நடிக்கட்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு நடக்கவே இல்லை. என்ன என்று விசாரித்தபோது, படத்தை தயாரிக்க தயாரிப்பாளருக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஜெமினி கணேசன் நடிப்பில் இந்த படம் வெளியானது.

1963-ம் ஆண்டு ஜெமினி கணேசன், சாவித்ரி, கே.ஆர்.விஜயா, முத்துராமன், ரங்காராவ், எம்.ஆர்,ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான கற்பகம் படம் தான். இந்த படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே இயக்கியிருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment