எம்.ஜி.ஆர் சிவாஜி இடையே திரைத்துறையில் ஆரோக்கியமான போட்டி இருந்தாலும், அரசியலில் முதல்வர் ஆகிவிட்ட எம்.ஜி.ஆர் சிவாஜியிடம் செல்லமாக விளையாடிய நிகழ்வுகள் பலரும் அறிந்திடாத ஒரு தகவலாக உள்ளது.
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு முன்பே நடிக்க தொடங்கிவிட்டாலும், எம்.ஜி.ஆர். சிவாஜி இருவருமே சமகாலத்தில் சினிமாவில் கதாநாயகர்களாக அறிமுகமாகியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து நிலையில், வாள் சண்டை, உள்ளிட்ட கலைகளில் எம்.ஜி.ஆர் சிறந்தவராக இருந்த நிலையில், நடிப்பில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்பது போல் சிவாஜி இருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே மோதல், அரசியல் கருத்து வேறுபாடு என பல தகவல்கள் வெளியாகியானலும், எம்.ஜி.ஆர் – சிவாஜி இடையே ஆழமான நட்பு இருந்தது. அதை இருவருமே கடைசி வரை போற்றி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் அரசியலில், கால்பதித்து, சினிமாவை விட்டு விலகிய நிலையில், சிவாஜி தனது கடைசி மூச்சுவரை தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
ஒருமுறை இயக்குனர் கே.சங்கர் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, சிவாஜி குறித்து நலம் விசாரித்துள்ளார். தம்பியின் நடிப்பை மிஞ்ச தமிழ் சினிமாவில் ஆள் இல்லை. ஆனால் யார் எது சொன்னாலும் அப்படியே நம்பி விடுவார் என்று எம்.ஜி.ஆர் சொன்ன, என்ன இப்படி சொல்றீங்க என்று கே.சங்கர் கேட்டுள்ளார். இதற்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன். இப்போது சிவாஜி தஞ்சாவூரில் தியேட்டர் கட்டிக்கொண்டு இருக்கிறார்.
சாந்தி – கமலா என்ற இந்த தியேட்டரை நான் தான் திறந்து வைக்க வேண்டும் என்று என்னிடம் தேதியும் சொல்லிவிட்டார். இப்போது பாருங்கள் என்று சொல்லி, சிவாஜிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர், நான் தான் பேசுகிறேன் என்று சொல்ல, சிவாஜி சொல்லுங்க அண்ணே என்று கூறியுள்ளார். அப்போது, தம்பி தியேட்டர் திறந்து விழா அன்று டெல்லியில் ஒரு மாநாடு இருக்கிறது. அதனால் தியேட்டர் திறக்க என்னால் வர முடியாது என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவாஜி, என்ன அண்ணே உங்களை நம்பித்தான் தேதி குறித்திருக்கிறேன். இப்போது இப்படி சொன்னால் எப்படி அண்ணே, நான் உங்களை போக விட மாட்டேன். நீங்கள் தியேட்டர் திறக்க வந்தே ஆக வேண்டும் என்று சொல்ல, என்னை போக விடாமல் தடுக்க என்ன செய்வாய் என்று எம்.ஜி.ஆர் கேட்க, உங்கள் காரின் குறுக்கே படுத்துவிடுவேன் என்று சிவாஜி கூறியுள்ளார். நான் காரில் போகவில்லை. ப்ளைட்டில் போகிறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இதை கேட்டு கொஞ்சம் இருங்க என்று போனை கட் செய்த சிவாஜி, அரைமணி நேரம் கழித்து அண்ணே, நான் ஏர்போர்ட்டில் உங்களை தேடிவிட்டேன் நீங்கள் அங்கு இல்லையே என்று சொல்ல, நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். மீண்டும் கார் மூலமாக பெங்களூர் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்படுகிறேன். நீ ஒன்று செய் வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சிவாஜி உடனயாக எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அண்ணே உங்களை கேட்டு தானே தேதி குறிச்சேன் இப்போது இப்படி சொன்ன எப்படி, என்று கேட்க, தியேட்டரை விட மாநாடு முக்கியம்பா என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அருகில் இருந்த கே.சங்கர் சிரித்து காட்டி கொடுத்துவிடுகிறார். அதன்பிறகு என்ன இது உங்களுக்குள் இருக்கு விளையாட்டு என்று சங்கர் கேட்க, நான் அரசியலில், வந்துவிட்டதால், ஏகப்பட்ட டென்சன். அதனால் சினிமா நினைவுகள் வரும்போது இப்படி எதாவது செய்ய வேண்டும்.
அப்படி விளையாட வேண்டும் என்றால் எனக்கு சமமான ஆள் வேண்டுமே தம்பியை விட்டால் திரைத்துறையில் சமமான ஆள் யார் இருக்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்க, நீ் நடிகர் திலகமா இருந்தாலும் உன்கிட்டையே எப்படி நடித்தேன் பார்த்தியா என்று எம்.ஜி.ஆர் விளையாட்டுத்தனமாக கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.