நாகேஷ்க்கு இது செட் ஆகாது... குறை சொன்ன டி.எம்.எஸ்... அவரை வைத்தே வெற்றியை பறிந்த படக்குழு
அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலில், பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் இசைக்கலைஞர்கள் பலர் வந்திருப்பார்கள்.
அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலில், பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் இசைக்கலைஞர்கள் பலர் வந்திருப்பார்கள்.
நாகேஷ் நடிப்புக்கு இது செட் ஆகாது ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் கூறியதை முறியடிக்க படக்குழு பல முயற்சிகள் செய்ததாக தயாரிப்பாளர் ஏ.வி.எம்.ராஜன் கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஏ.வி.எம் நிறுவனம். பல முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இந்நிறுவனம் சிறு பட்ஜெட் படங்களை பெரிய வெற்றிப்படமாக கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான படம் சர்வர் சுந்தரம். காமெடி நடிகராக நாகேஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
தனக்கு அழகில்லை என்று நினைத்துக்கொண்டு தாழ்வுமனப்பான்மையில் இருக்கும் ஒருவன் சினிமாவில் எப்படி சாதித்தான் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு கே.பாலச்சந்தர் திரைக்கதை அமைக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலில், பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் இசைக்கலைஞர்கள் பலர் வந்திருப்பார்கள். அதேபோல் நாகேஷ் நடிகையுடன் நடனமாடும் காட்சி படமாக்கப்படுவது போல் காட்டியிருப்பார்கள்.
Advertisment
Advertisements
இந்த பாடலை பாடிய டி.எம்.சௌந்திரராஜன் படலை பாடிவிட்டு இந்த பாடல் யாருக்கு என்று கேட்டுள்ளார். படத்தில் நாகேஷ்க்கு தான் இந்த பாட்டு என்று தயாரிப்பு குழு சொல்ல, இந்த பாடலை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த பாடல் திரையில் வரும்போது தியேட்டரில் ஆடியன்ஸ் வெளியே வந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
டி.எம்.எஸ் சொன்னதை முடியடிக்க வேண்டும் என்பதற்காக அவரையே படத்தில் பாடல் பாடுவதுபோல் வர வைத்து கூடவே எம்.எஸ்.வி கம்போசிங் செய்வது போல் வைத்து பாடலை வெற்றி பெற வைத்துள்ளதாக தயாரிப்பாளர் ஏ.வி.எம்.குமரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“