கல்லக்குடி கண்ட கருணாநிதி என்று சொல்வதை விட கண்ணதாசன் என்று தான் சொல்ல வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது குறித்து கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கண்ணதாசனின் வனவாசனம் புத்தகத்தில் இருந்து விளக்கம் அளித்துள்ளார்.
1953-ல் தமிழகத்தில் கல்லக்குடியில் நடைபெற்ற போராட்டம் இன்றும் வரலாற்றில் முக்கிய போராடடமாக பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு கலைஞர் கருணாநிதியின் தலைமையில் முதல் அணியும், ராமசுப்பையா தலைமையில் 2-வது அணியும், கண்ணதாசன் தலைமையில் 3-வது அணியும் களமிறங்கியது. இதில் முதலில் டால்மியாபுரம் என்று இருக்கும் இடங்களில் எல்லாம் கல்லக்குடி என்று எழுத போகிறோம் என்று தான் போராட்டத்திற்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
முதல் அணியாக அங்கு சென்ற கருணாநிதி தலைமையிலான அணி டால்மியாபுரம் என்று இருந்த அனைத்து இடங்களிலும் கல்லக்குடி என்று எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கும் டால்மியாபுரம் என்பதை கல்லக்குடி என்று மாற்றியபோது, காவல்துறையினர் அவரை ஒன்றும் செய்யவில்லை. இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த கருணாநிதி உடனடியாக ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது காவல்துறையினர் அவரையும் அவரது அணியும் கைது செய்த நிலையில், அடுத்து வந்த ராமசுப்பையா அணியும் அதையே செய்ததால் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 3-வது அணியாக கண்ணதாசன் அணி வந்துள்ளது. இந்த முறை காவல்துறையினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆனாலும் கண்ணதாசன் அணி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது தடியடி துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் பலருக்கும் காயமடைந்த நிலையில், கண்ணதாசனுக்கு கையில் மூட்டு நழுவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது கண்ணதாசன் அணியை சேர்ந்த அனைவரையும் கைது செய்த போலீசார் 15 நாட்கள் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரயில்வே துறையில் 2 வழக்கு மற்றும் தமிழக காவல்துறையில் 3 வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் கண்ணதாசன் உள்ளிட்ட 24 பேர் மீது போடப்பட்டது. 15 நாட்கள் கழித்து கண்ணதாசன் வெளியில் வந்தாலும் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்துள்ளது.
அப்போது திருச்சியில் பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்த திமுகவை சேர்ந்த சிற்றரசு என்பவர் கல்லக்குடி வழக்கு நிதி என்று தனது பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து வசூல் செய்துள்ளார் ஆனால் இந்த பணம் எதுவும் கண்ணதாசனின் இந்த வழக்கிற்காக செலவு செய்யப்படவில்லை. அதேபோல் கண்ணதாசனுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட கருணாநிதி அணி, ராமசுப்பையா அணியை சேர்ந்த பலரும் 3 மாத சிறைதண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் கண்ணதாசன் வெளியில் இருந்தாலும் அவரது வழக்கு மட்டும் நிலுவையில் இருந்துள்ளது. அப்போது பணம் இல்லாமல் சிரமப்பட்ட கண்ணதாசன், மாடர்ன் பிச்சர் டி.ஆர் சுந்திரத்திடம் சென்று செலவுக்கு ரூ 500 பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அன்று மாலையே ஊருக்கு புறப்பட தயாரான கண்ணதாசன், அவரிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று வந்துள்ளார். அப்போது கண்ணதாசனை பார்த்த டி.ஆர்.சுந்தரம் ஒரு படத்திற்கு கதை வசனம் எழுதி தருகிறாயா என்று கேட்டுள்ளார்.
அதுவரை பாடல்கள் மட்டுமே எழுதி வந்த கண்ணதாசன் முதல்முறையாக கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதிய படம் தான் இல்லற ஜோதி. சிவாஜி நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சேலத்தில் இருந்துகொண்டே தனது வழக்கு விசாரணைக்காக ஆஜராகி வந்த கண்ணதாசனுக்கு வழக்கு முடிவில் ஒன்னரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைது செய்யப்பட்ட கருணாநிதி மற்றும் ராமசுப்பையா ஆகியோர் 3 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.