தமிழ் சினிமாவில் நாட்டு நடப்புகளை மையமாக வைத்து சமூகத்தின் மீது அக்கரையுடன் பாடல் எழுதிய முக்கிய கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியை சந்தித்தை வைத்து, பெட்டிக்கடையில் ஒரு சிறுவனை பார்த்து விளையாடாக்க பாடிய ஒரு பாடல் பிறகு எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்று பெரிய ஹிட் பாடலாக மாறியுள்ளது.
Advertisment
சமூக அக்கரையுடன், நாட்டில் நடக்கும் உண்மை சம்பவங்களை பாடலாக மாற்றி பாடுவதில் வல்லவராக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரானார் குறித்து, வீரப்பன் என்பவரின் மூலம் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், பட்டுக்கோட்டை இதேபோல் வேறு ஏதேனும் பாடல் எழுதினால் உடனடியாக எனக்கு சொல்லுங்கள் என்று சொல்ல, வீரப்பனும் சரி என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
அதன்பிறகு ஒருநாள், வீரப்பனை தேடி அவரை அறைக்கு வந்த பட்டுக்கோட்டை அங்கு எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து, என்ன இப்படி தூங்கிகிட்டு இருக்கீங்க, வாங்க கொஞ்சம் நடந்து போய்ட்டு வரலாம் என்று சொல்ல, அனைவரும் நடந்து செல்கின்றனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் பொருள் வாங்கும்போது, அங்கு இருந்த பையன், தூங்கிக்கொண்டிருக்க, அவனிடம் தூங்காத தம்பி தூங்காத என்று பாடல் வடிவில் கூறியுள்ளார்.
இந்த ஒரு வரியுடன் முடித்துக்கொண்டாலும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்த ஒரு வாரி பாடலாக மாறியுள்ளது. 1957- தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்திக்கிறது. முக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தோல்வியை சந்தித்த நிலையில், இந்த தோல்வி ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவாதிக்க, கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் கலந்துகொள்கிறார்.
Advertisment
Advertisements
இந்த கூட்டத்தில் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் பட்டுக்கோட்டை பேசியிருந்தாலும், அவர்கள் தோல்வியில் இருந்து மீளவில்லை என்பதை அவர் உணர்ந்துகொள்கிறார். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாடலை பாட யோசித்த பட்டுக்கோட்டை, பட்டிக்கடையில் அந்த சிறுவனுக்கு சொன்ன ஒரு வரியை எடுத்துக்கொண்டு பாடலாக பாடுகிறார். அந்த பாடல் தான் ‘’தூங்காதே தம்பி தூங்காதே. சோம்பேறி என்ற பெயர் வாங்கதே’’ என்ற பாடல்.
பட்டுக்கோட்டையின் இந்த பாடல் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலை கேட்ட வீரப்பன் அடுத்த நாளே இது குறித்து எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அப்போது தமிழ் சினிமாவில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமான நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆர், தனது படத்திற்கு இந்த பாடலை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நாடோடி மன்னன் திரைப்படம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இந்த பாடலை படத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆர் அந்த பாடலுக்காக காட்சிகளை மாற்றியுள்ளார். அதேபோல் இந்த பாடலை கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாடிய பட்டுக்கோட்டை அடுத்த தேர்தலில் நான் கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியிருந்த நிலையில், அடுத்து தேர்தலுக்கு முன் அவர் மரணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“