Advertisment

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த ராதிகா... என்ன சொன்னார் தெரியுமா? கிளாசிக் பிளாஷ்பேக்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijayakanth

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் திரைத்துறையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த சமயத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராதிகா மறுத்துவிட்டதாக மூத்த நடிகை வடிவுக்கரசி கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜய்காந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கு சமமான உணவு வழக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்

publive-image

மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், உதவி என்று யார் கேட்டாலும் அனைவருக்கு உதவுபவர் என்று அவருடன் இருந்த பலரும் கூறியுள்ளனர். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த் குறித்து பிரபலங்கள் பலரும் நாள்தோறும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை வடிவுக்கரசி தயாரித்த அன்னை என் தெய்வம் படம் குறித்தும் அதில் நடித்த விஜயகாந்த் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் திரைத்துறையில் அறமுகமானவர் வடிவுக்கரசி.

தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த இவர், அதன்பிறகு வில்லி மற்றும் அம்மா கேரக்டரில் நடிக்க தொடங்கிவிட்டர். தற்போது சீரியலில் நடித்து வரும் வடிவுக்கரசி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களை தயாரித்துள்ள வடிவுக்கரசி விஜயகாந்த் நடிப்பில் அன்னை என் தெய்வம் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் குறித்து பேசியுள்ள அவர், இந்த படத்தில் நடிக்க ஒரு நில ஹீரோக்களை அனுகினோம். ஆனால் யாரும் அமையாதபோது விஜயகாந்த் நினைவுக்கு வந்தார். அவரிடம் சென்று கதை சொன்னோம். உடனடியாக ஓகே பண்ணலாமே என்று சொன்னார். அதன்பிறகு அவருடன் நாயகியாக நடிக்க நடிகை ராதிகாவிடம் பேசினோம்.

publive-image

ஆனால் அவர், அந்த கருப்பனுடன் யார் நடிப்பா, உங்களுக்கு வெற ஹீரோவே கிடக்கலயா என்று கேட்டு மறுத்துவிட்டார். அதன்பிறகு நடிகை ஜீவிதாவிடம் பேசினோம் அவரும் ஒத்துவராததால் அடுத்தாக மாதுரியை பிக்ஸ் செய்தோம். அதேபோல் அம்மா கேரக்டரில் நடிக்க நடிகை லட்சுமியை அனுகியபோது அவர் மறுத்துவிட அந்த கேரக்டரில் கே.ஆர்.விஜயா நடித்தார். வடிவுக்கரசி பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

1986-ம் ஆண்டு விஜயகாந்துடன் அன்னை என் தெய்வம் படத்தில்  நடிக்க மறுத்த நடிகை ராதிகா, அடுத்த வருடமே (1987) பூந்தோட்ட காவல்காரன், நீதியின் மறுபக்கம், சிறைபறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment