Advertisment

பாதியில் நின்ற முதல் படம்... எம்.ஜி.ஆர் செய்த அதிரடி மாற்றம்... கிளாசிக் பிளாஷ்பேக்

படப்பிடிப்பில் எந்த பிரச்சினை வந்தாலும் அனைவரும் எம்.ஜி.ஆரிடம் வந்து சொல்லவார்கள். அவர் அந்த பிரச்சினைகளை சரியாக முடிவுடன் தீர்த்து வைப்பார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாதியில் நின்ற முதல் படம்... எம்.ஜி.ஆர் செய்த அதிரடி மாற்றம்... கிளாசிக் பிளாஷ்பேக்

1961-ம் ஆண்டு வெளியான வெளியாக மருதநாட்டு இளவரசி படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகனாக தனது முத்திரையை பதித்த எம்.ஜி.ஆர் நடிகை ஒருவருடன் காதலில் விழுந்தது, எம்.ஜி.ஆரை நடிகை ஒருவர் துரத்தி துரத்தி காதலித்தது தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து பிறகு நாயகனாக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத நாயகனாக வளர்ந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர்  எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம்.   

இதனிடையே தனது முதல் படத்தில் எம்.ஜி.ஆர் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் காதல் குறித்து நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் 1950-ம் ஆண்டு வெளியான மருதநாட்டு இளவரசி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி. ஏற்கனவே மோகினி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகி இணைந்து நடித்திருந்த நிலையில், இவர்கள் இருவரும் இணைந்த இரண்டாவது படம் மருநாட்டு இளவசரி. இந்த படத்தில் நடிக்கும்போதே எம்.ஜி.ஆருக்கு வி.என்ஜானகி மேல் காதல் மலர்ந்தது. அதே சமயம் மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த மற்றொரு நடிகை எம்.ஜி.ஆரை தீவிரமாக காதலித்துள்ளார்.

மேலும் தனது காதலை எம்.ஜி.ஆரிடம் வெளிப்படுத்திய அந்த நடிகை இப்போவே நீங்கள் சம்மதம் சொன்னால் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள தயார் என்று கூறியுள்ளர்ர். ஆனால் எம்.ஜி.ஆர் அப்போதே அந்த நடிகையின் காதலை ஏற்க மறுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர்  மாதிரி பல மடங்கு சம்பளம் வாங்கி வந்தாலும் இந்த வித்தியாசம் எதுவும் இல்லாமல் எம்.ஜி.ஆர்  வி.என்.ஜானகி இருவரும் காதலித்து வந்தனர். மேலும் முதல் படம் என்றாலும், இந்த படத்திற்காக பல இன்னல்களை சந்தித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

மருதநாட்டு இளவரசி படம் தொடங்கப்பட்டபோது அந்த படத்திற்கு தஞ்சையை சேர்ந்த அனுராதா என்ற பாடகி ஒருவர்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அப்போது அந்த படத்திற்கு காளிதாசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தயாரித்த நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த டி.ஏ.சாரி என்பவர் தான் படத்திற்கு வசனம் எழுதி வந்தார்.

மேலும் இந்த படத்திற்கு எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்தவரும் இந்த டி.ஏ.சாரிதான். எம்.ஜிஆரின் தோற்றத்தை பார்த்தவுடன் பிடித்துபோன் அப்படத்தின் தயாரிப்பாளர் முத்துச்சாமி உடனடியாக எம்.ஜி.ஆரை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் சம்பளம் 4 ஆயிரம். படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், படத்திற்கான வனசத்தை எழுதி வந்த டி.ஏ.சாரி சரியான முறையில் வசனத்தை கொடுக்காமல் இருந்ததால் அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் முத்துச்சாமி.

இதனால் தயாரிப்பு நிறுவனம் முழுவதுமாக கலைக்கப்பட்டது  இதனால் எம்.ஜி.ஆரின் முதல் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கோவிந்தன் என்ற நிறுவனம் இதுவரை எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் மற்றும் பாடல்களை வாங்கி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். ஆனால் சாரி வெளியேறிவிட்டதால், வசனங்கள் எழுத யாரை தேர்வு செய்யலாம் என்று தயாரிப்பு நிறுவனம் குழப்பியுள்ளது.

அப்போது கருணாநிதி பற்றி அவருக்கு எடுத்து கூறி அந்த படத்திற்கு அவர் வசனம் எழுத கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். சாரி ஒரு நாளைக்கு ஒரு காட்சிக்கு மட்டுமே வசனம் கொடுத்து வந்த நிலையில் கருணாநிதி ஒரு வாரத்தில் படத்தின் அனைத்து காட்சிகளக்கும் வசனங்கள கொடுத்துவிட்டார். மேலும் இந்த படத்தின் வசனத்திற்கு கருணாநிதியை பரிந்துரைத்த எம்.ஜி.ஆர் நாயகியாக வி.என்.ஜானகியை பரிந்துரைத்துள்ளார்.

அதன்பிறகு படப்பிடிப்பில் எந்த பிரச்சினை வந்தாலும் அனைவரும் எம்.ஜி.ஆரிடம் வந்து சொல்லவார்கள். அவர் அந்த பிரச்சினைகளை சரியாக முடிவுடன் தீர்த்து வைப்பார். இப்படி தான் நாயகனாக நடிக்கும் முதல் படத்திற்காக எம்.ஜி.ஆர் பல பிரச்சனைகளை கடந்து நாயகான வந்துள்ளார். பின்னாளில் படத்தின் நாயகி வி.என்.ஜானகியை திருமணமும் செய்துகொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment