தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாழ்க்கையில் சந்தித்த முக்கிய பிரச்சினைகள் குறித்து அவரது காஸ்டியூமராக இருந்த முத்து என்பவர் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிராக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், அரசியலில் சிறந்த தலைவனாகவும் உயர் தொண்டர்களையும் பெற்று காலத்தால் அழியாக புகழுடன் உயர்ந்து நிற்பவர் எம்.ஜி.ஆர். 1936-ம் ஆண்டு சதிலீலாவதி படத்தில் நடிகராக தொடங்கி 1987-ம் ஆண்டு அவர் மரணமடைந்தது வரை பல பிரச்சனைகளை சாதுர்மாக சமாளித்து, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
பல புகழுக்கு சொந்தக்காரராக இருந்த எம்.ஜி.ஆர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் இன்றும் அவரை திரையில் ரசிக்கவும், அவருக்காக அதிமுகவுக்கு ஓட்டளிக்கும் மக்களும் இருக்கிறார். மேலும் அவ்வப்போது எம்.ஜி.ஆர் தொடர்பான பல சுவாரஸ்யமாக தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அவருக்கு காஸ்டியூமராக இருந்த முத்து என்பவர் காபி வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் பேசய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமகையில் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியபோது அவரால் அதிகம் பேச முடியவில்லை. ஆனாலும் அவர் சொல்ல வருவதை புரிந்துகொண்டு நாங்கள் அதை செய்வோம். ஆனாலும் அவர் அடிக்கடி கேட்பார் நான் பேசுவது புரிகிறதா என்று, ஆனாலும் நாம் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை என்றால் வருத்தப்படுவார் என்பதற்காக நீங்கள் சரியாகத்தான் பேசுகிறீர்கள் என்று சொல்லி அவருக்கு நம்பிக்கொடுத்து வந்தோம்.
ஒருமுறை தி.மு.க செய்த ரகளையால் பிரதமர் இந்திரா காந்தி தமிழகத்தில் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். டெல்லி சென்று 11 நாட்கள் அங்கிருந்து இந்திரா காந்தியை சம்மதிக்க வைத்து நிகழ்ச்சிக்கு வரவழைத்தார். ஆனாலும் அரைமணி நேரம் தான் நிகழ்ச்சியில் இருப்பேன் என்று சொல்லிவிட்டுதான் இந்திரா காந்தி வந்தார்.
நிகழ்ச்சிக்காக சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில் முன்பு திமுக ஆட்சியில் எங்கெல்லாம் அவருக்கு பிரச்சனை இருந்ததோ அங்கெல்லாம் பாட்டுக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இந்திரா காந்தியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து விருந்தினர் மாளிகைக்கு சென்ற இந்திரா காந்தி உடனடியாக எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நன்றி கூறினார். இதனால் எம்.ஜி.ஆர் மிகவும் சந்தோஷப்பட்டார். மேலும் அரைமணி நேரம் நிகழ்ச்சியில் இருக்கிறேன் என்று சொன்ன இந்திரா காந்தி இப்போது 2 மணி நேரம் இருக்கிறேன் என்று சொன்னார். இதனால் எம்.ஜி.ஆர் மேலும் மகிழ்ச்சியடைந்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தந்து. அதே சமயம் அருகில் ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இங்கு இந்திரா காந்தி நிகழ்ச்சி முழுவதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அங்கு எம்.ஜி.ஆர் வந்தால் தான் ஆடுவேன் என்று ஜெயலலிதா அடம் பிடிக்கிறார். இதனால் என்ன செய்வது என்று எம்.ஜி.ஆர் யோசித்துக்கொண்டு இருந்தார்.
இதனிடையே நிகழ்ச்சி முடிந்து இந்திரா காந்தியை ஏற்போட்டி கொண்டு போய் விட்ட எம்.ஜி.ஆர். உடனடியாக ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சி சென்றார். அங்கு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் வராததால் அழுவாத குறையாக ஜெயலலிதா இருந்தார். ஆனால் பாதியில் உள்ளே போனால் நிகழ்ச்சி கெட்டுவிடும் என்று யோசித்த எம்.ஜி.ஆர் அரங்கத்தின் பின் வழி இருக்கிறதா என்று பார்க்க சொன்னார்.
அரங்கத்தின் பின்னால் தட்டி கட்டியுள்ளது என்று சொன்னதுபோது அதில் இரண்டு தட்டிகளை பிரித்துவிட்டு உள்ளே சென்று நடனத்தை பார்த்தார் அதன்பிறகு அங்கு வந்திருந்த மக்கள் கை தட்டி ஆராவாரம் செய்ய நிகழ்ச்சியை சாதுர்யமாக யோசித்து சரியாக இரண்டு நிகழ்ச்சிகளையும் முடித்தார் எம்.ஜி.ஆர் என்று கூறியுள்ளார்.
ஒருமுறை சங்கே முழங்கு படத்தின் ஷூட்டிங்கின்போது கர்நாடகாவில் எலக்ஷன் டைம். அப்போது வட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் தமிழ் படங்களின் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் கற்களை வீசிதாக்குதல் நடத்தினர். இதனால் அஙகிருந்த ஒரு பார்க்கில் ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கே 100 குழந்தைகளுடன் ஒரு ஹெட்மாஸ்டர் அமர்ந்திருந்தார். ஆனால் கலவரக்காரர்கள் அங்கும் வந்து பிரச்சனை செய்தனர்.
அப்போது அவர்கள் வீசும் கற்கள் குழந்தைகள் மீது படாமல் இருக்க எம்.ஜி.ஆர் அந்த குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சும்மா லத்தியை வாங்கி ஓங்கியபோது கலவர கும்பல் குழந்தைகளை நோக்கி ஓடினர். ஆனால் உடனடியாக எம்.ஜி.ஆர் குழந்தைகள் பக்கம் சென்று இந்த பக்கம் யாரும் வரக்கூடாது என்று சொல்லி அவர்களை விரட்டி அடித்தார். அப்போது அந்த ஹெட்மாஸ்டர் குழந்தைங்க தன் முக்கியம்னு அவர்களை காப்பாற்றினீங்களே உங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்று சொல்லிவிட்டு அழுதார்.
அப்போது எம்.ஜி.ஆர் ஏம்மா நீ அழுவுற இவங்க எல்லாருமே என் குழந்தைங்கதான். எனக்குனு ஒரு குழந்தை இருந்தால் நான் அதைத்தான் பார்த்திருப்பேன். குழந்தை வளர வளர சொத்து சேர்க்கனும், அது தப்பு பண்ணா நான் பதில் சொல்லனும். ஆனால் இப்போது எனக்கு எல்லா வரிசும் இதுங்க தான். இவர்கள் வளமாக இருந்தால் அதை பார்த்து என்க்கு சந்தோஷம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil