காத்திருந்த ஏ.வி.எம் நிறுவனம்... மது போதையில் வந்த வாலி : அவசரத்தில் எழுதிய அசத்தல் பாடல்
திரையுலகில் முன்னணி கவிஞராக இருந்த வாலி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தாலும், ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வராமல் இருந்தது.
தமிழ் சினிமாவில் பல புதுமையான முயற்சிகளை செய்து வெற்றிகண்ட நிறுவனங்களில் ஏ.வி.எம் நிறுவத்திற்கு பெரிய பெயர் உண்டு. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஒரு படத்தை பார்த்து இந்த படம் நன்றாக போகும் என்றால் ஹிட் அடிக்கும், படம் சரியாக போகாது என்றால் அந்த படம் தோல்வியை தழுவும் என்பது அன்றைய வேத வாக்காக இருந்தது.
Advertisment
அதேபோல் அவ்வப்போது புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஏ.வி.எம் நிறுவனம் 1964-ம் ஆண்டு புதிதாக ஒரு முயற்சி எடுத்தது. காமெடி நடிகராக இருந்த நாகேஷை நாயகனாகவும், அப்போது நாயகனாக இருந்த முத்துராமனை துணை நடிகராகவும் வைத்து சர்வர் சுந்தரம் என்ற படத்தை தொடங்கியது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி நடக்கும், சினிமாவில் பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்ட பல வேலைகள் எப்படி நடக்கும் என்பதை அப்படியே காட்டியிருப்பார்கள்.அப்போது திரையுலகில் முன்னணி கவிஞராக இருந்த வாலி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தாலும், ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வராமல் இருந்தது. எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் படம் நிதி பிரச்சனையில் சிக்கியபோது அதற்கு ஏ,வி.மெய்யப்ப செட்டியார் உதவி செய்துள்ளார்.
அப்போது அந்த படத்தின் பாடல்களை கேட்ட அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் பாடல் எழுதியது என்று கேட்க வாலி என்று கூறியுள்ளனர். நன்றாக எழுதியிருக்கிறார் என்று பாராட்டிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சர்வர் சுந்தரம் படத்தில் அவரை பயன்படுத்தலாம் என்று நினைத்து எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இதுபற்றி பேசுகிறார். உடனடியாக எம்.எஸ்.வி வாலியை அழைத்து வர தனது உதவியாளரை அனுப்புகிறார். அன்று காலை எம்.எஸ்.வியுடன் வேறு படத்திற்காக வேலை செய்த வாலி மதியம் வேலை இல்லை என்று வீட்டிற்கு சென்றுள்ளார்.
Advertisment
Advertisement
வீட்டுக்கு வந்த வாலி மது குடிக்க தொடங்கியுள்ளார். அவர் மதுவினால் நிதானம் இல்லாத நிலைக்கு சென்ற பிறகு எம்.எஸ்.வியின் உதவியாளர் வருகிறார். உங்களை ஏ.வி.எம். நிறுவனத்தில் இருந்து அழைத்து வர சொன்னார்கள் என்று சொல்ல, அது அப்புறம் போய்க்கலாம் நீங்க வாங்க என்று அவரையும் சேர்த்து குடிக்க வைத்துவிடுவார் வாலி. போனவரை காணவில்லையே என்று எம்.எஸ்.வி மற்றொருவரை அனுப்ப அவரும் வாலியின் வீட்டில் வந்து மது குடித்துவிட்டு இருக்கிறார். ஆனால் இன்றைக்கு பாடல் எழுதி இரவு இசையமைத்து நாளை ஷூட் செய்ய வேண்டும் என்பது மெய்யப்ப செட்டியாரின் அவசரமாக இருந்தது.
ஆனால் போனவர்கள் யாரும் வாலியை அழைத்து வரவில்லையே என்று யோசித்து இசையமைப்பாளர் கோவர்த்தன் என்பரை அனுப்பி வைக்கிறார். அவர் வந்து பார்த்து அதிர்ச்சியில் உங்களுக்காக ஏ.வி.எம் நிறுவனத்தில் அனைவரும் காத்திருக்கிறார்கள் சீக்கிரம் கிளம்பி வாங்க என்று சொல்ல, நான் எம்.எஸ்.வியிடம் கேட்டுவிட்டு தானே வந்தேன் என்று வாலி சொல்ல, அதன்பிறகு கோவர்த்தன் மெய்யப்ப செட்டியார் சொன்னதை சொல்கிறார். இதை கேட்டு வாலி உடனடியாக கிளம்புகிறார்.
ஆனால் இப்படி மது போதையில் சென்றால் ஏ.வி.எம் செட்டியார் ஏற்று்ககொள்ளமாட்டார் என்று குளித்துவிட்டு கிளம்பி செல்கிறார். அங்கு படத்திற்கு வந்துள்ள எதிர்ப்பு, படத்தின் சுட்சிவேஷன் அனைத்தையும் கேட்டுள்ளார். இதில் தனது நண்பர் நாகேஷை ஹீரோவாக காப்பாற்ற வேண்டும். ஏவிஎம் நிறுவனத்தை திருப்திபடுத்த வேண்டும் இந்த வகையில் அந்த பாடல் இருக்க வேண்டும் என்று நினைத்து வாலி பாடல் எழுத தொடங்குகிறார்.
இந்த பாடல் தான் ‘’அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன’’ என்ற பாடல். இந்த பாடலை பார்த்த ஏ.வி.எம் செட்டியாருக்கு ரொம்பவே பிடித்துபோகிறது. பாடலுக்கு பாராட்டு சொல்லிவிட்டு அவர் போகும்போது இங்கு கெட்ட வாடை வருகிறது. அது என்ன என்று பார்த்து சாம்பிராணி போடுங்க என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“