சொல்ல முடியாத வலிகளை மனதில் வைத்துக்கொண்டு ஒருவன் பாடுவது போன்ற ஒரு பாடலை கவிப்பேரரசு வைரமுத்து 10 நிமிடங்களில் எழுதி முடிக்க, அதை அழுதுகொண்டே பாடி முடித்துள்ளார் பாடகர் யேசுதாஸ். அது என்ன பாடல்,
Advertisment
தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர், 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். அதன்பிறகு வெளியான படம் ஒன்றில், வைரமுத்து பெரிய ஹிட்டை கொடுத்திருப்பார். அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் மேகம் கருத்திருக்கு என்ற திரைப்படம்.
1987-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ராமநாராயணன் இயக்க, பிரபு, ரேகா, ரகுவரன், மாதுரி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். மனோஜ்- க்யான் இசையமைத்த இந்த படத்திற்கு, வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பார். படிக்காத கருப்பாக இருக்கும் பிரபு, படித்த சிகப்பாக உள்ள ரேகாவை திருமணம் செய்துகொள்வார். இந்த திருமணத்தில் ரேகாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் பிரபுவுடன் வாழ்ந்து வருவார்.
பிரபுவை விட்டு பிரிய வேண்டும் என்று நினைக்கும் ரேகா வேலை தேடி நகரத்திற்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருப்பார். அந்த விடுதிக்கு பிரபு வாட்ச் மேனாக வருவார். அப்போது வரும் ஒரு பாடல் தான் ‘அழகான புள்ளி மானே’ என்ற பாடல். இந்த ஒரு பாடலை எழுதுவதற்காக வரவழைக்கப்பட்ட கவிப்பேரரசு வைரமுத்து, இந்த டியூனை கேட்டவுடன், 10 நிமிடங்களில் அங்கேயே உட்கார்ந்து அந்த பாடலை எழுதி முடித்துள்ளார். அதன்பிறகு இந்த படத்தில் அனைத்து பாட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை பாடிய கே.ஜே.யேசுதாஸ் அழுதுகொண்டே பாடலை பாடி முடித்துள்ளார். 10 நிமிடத்தில் எழுதி பாடகர் அழுகொண்டே பாடிய இந்த பாடல் காலம் கடந்து இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“