scorecardresearch

ஸ்டைலாக வந்த விஜய்… படப்பிடிப்பை நிறுத்திய லோகேஷ்… லியோ ஷூட்டிங் வீடியோ வைரல்

காஷ்மீரில் நடைபெற்று வரும் விஜயின் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்டைலாக வந்த விஜய்… படப்பிடிப்பை நிறுத்திய லோகேஷ்… லியோ ஷூட்டிங் வீடியோ வைரல்

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமா வெளியில் வருவதற்கு பல தசாப்தங்கள் தேவைப்பட்டது. அப்படி வெளியே வந்த சினிமா பலவகையாக தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக பிலிம் ரோல்களில் அடங்கி இருந்த சினிமா தற்போது ஒரு சிறிய சிப் வடிவத்திற்கு மாறியுள்ளது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பல வகையான சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும் சில பாதகமான அம்சங்களையும் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதில் முக்கியமானது பைரசி. ஒரு திரைப்படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஆன்லைனில் கசிய விட்டு விடுகிறார். அதேபோல் ஸ்மார்ட்போன் இருக்கும் ஒவ்வொருவரும் தற்போது படம் வெளியான சிலமணி நேரங்களில் படத்தின் மீதான விமர்சனங்களை பாசிட்டீவாகவும், நெகடீவாகவும் சொல்லி விடுகிறார். பொதுவாக ரசிகர்கள் இந்த மாதிரியான விமர்சனங்களை பார்த்தே படம் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்கின்றனர்.

அதேபோல் படப்பிடிப்பு தளங்களில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள். எவ்வளவு பாதுகாப்பாக படப்பிடிப்புகள் நடத்தினாலும், பெரிய நடிகர்களில் படங்களில் இருந்து எதாவது ஒரு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையததில் கசிந்துவிடுகினறன. இதில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சிவாவுடன் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து படங்கள் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

அந்த வகையில், தற்போது விஜய்யின் லியோ படமும் இதே போன்ற சிக்கலை எதிர்கொள்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. பெரிய எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்காக காஷ்மீரிய்ல செட் அமைத்து படப்பிடிப்பபை நடத்தி வரும் நிலையில், செட்டில் இருந்து கசிந்த வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், விஜய் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் இருக்கிறார். படத்தின் டீசரில் அவர் இருந்த அதே லுக்கில் காணப்படுகிறார். காரில் இருந்து இறங்கும் விஜய், ஒரு குழுவினருடன் பேசுவதைக் காணலாம். இதற்கிடையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை நிறுத்துமாறு கேமராவை நோக்கி அசைப்பதைக் காணலாம். லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதால், படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுபோன்ற கசிவுகள் மற்றும் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

வியோ படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோரும் படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் உள்ளனர். 2021 இல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது கூட்டணியை லியோ குறிக்கிறது. லியோ லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. லியோ அக்டோபர் 19, 2023 அன்று வெளியாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema clip of vijay from leo sets in kashmir leaked

Best of Express