சிவ பக்தைக்கு தெரிந்த மர்ம உண்மை... கவனம் ஈர்க்கும் கலர்ஸ் தமிழின் புதிய சீரியல்
சிவராத்திரி அன்று சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சந்தியா வழிபாடு நடத்துகிறார். சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி அன்று சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சந்தியா வழிபாடு நடத்துகிறார். சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வரும் கலர்ஸ் தமிழில் சேனலில் அவ்வப்போது புதிய சீரியல்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக முன்னணி சேனல்களே கைவிட்ட பக்தி தொடர்களை மீண்டும் ஒளிபரப்பி கவனம் ஈர்த்த கலர்ஸ் தமிழ் சேனல் தற்போது தனது கவனத்தை ஃபேண்டசி பக்கம் திருப்பியுள்ளது.
Advertisment
அந்த வகையில் இன்று முதல் (ஆகஸ்ட் 21) கலர்ஸ் தமிழிலில் சந்தியா என்ற புதிய ஃபேண்டசி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சீரியல் சந்தியா என்ற பெண்ணைச் சுற்றியே கதை நகர்கிறது. சிவராத்திரி அன்று சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சந்தியா வழிபாடு நடத்துகிறார். சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம்.
சந்தியாவுக்கு அந்த சிவனின் அருள் கிடைக்கிறது. அதில் அவள் வருங்கால கணவனை காண்கிறாள். அதே சமயம் இதனால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். காரணம் அவள் தற்போது வேறொருவனை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். இதற்கு காரணம் ஒரு தீய சக்தி. அது ஏன் சந்தியாவின் வாழ்க்கைக்குள் வரவேண்டும். வந்து என்ன செய்கிறது என்பதுதான் சந்தியாவின் கதை.
Advertisment
Advertisements
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த சீரியலின் ப்ரமோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் முன்னணி சேனல்கள் குடும்பம் மற்றும் க்ரைம் தொடர்பான சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில், கலர்ஸ் தமிழ் தனது கவனத்தை ஃபேண்டரி பக்கம் திருப்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”