வடிவேலு காலில் விழுந்து கெஞ்சினேன் ஆனால் அவர் என்னை எட்டி மிதித்து இனி ஆபீஸ் பக்கமே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார் என்று நடிகர் போண்டாமணி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இலங்கை தமிழ் பேசி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இலங்கை தமிழரான இவர், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜூவின் பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானார்
இதில் மருதமலை, வின்னர், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் போண்டா மணியின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும், அவருடன் நடித்த ஒவ்வொரு காட்சிக்கும் தான் போராடித்தான் வாய்ப்பு பெற்றதாகவும், வடிவேலு சிங்கமுத்து இருவரும் சேர வேண்டும் என்று நான் சொன்னதால், தன்னை எட்டி மிதித்தார் என்று போண்டாமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், தெரிந்த ஒரு நண்பரின் உதவியுடன் ரமேஷ் கண்ணா இயக்கிய சீரியலில் நடிகர் விவேக்குடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. இதில் என் நடிப்பை பாராட்டிய விவேக் தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன்பிறகு அவரது வீட்டுக்கு செல்வேன், வேலைகளை செய்வேன் வாய்ப்பு தருவார் அதில் நடித்து வந்தேன்.
அதன்பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றபோது செந்தில் சாரின் அறிமுகம் கிடைத்து. அப்போது அவருடன் ஷூட்டிங்கில் இருப்பேன் கவுண்டமணி சாருக்கு கால் அமுக்கி விட்டு அவர்கள் கொடுக்கும் காசை வைத்து சாப்பிட்டு வந்தேன். ஆனாலும் விவேக் சாருடன் நட்பு தொடர்ந்து வந்தது. அப்போது ராஜராஜேஸ்வரி படத்தில் வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து.

ஆனால் அவர் போண்டா மணி வேண்டாம் வேறு யாரையாவது போடலாம் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் இயக்குனர் என்னை வலுக்கட்டாயமாக அதில் நடிக்க வைத்தார். அதில் எனது காமெடி பெரிதாக பேசப்பட்டது. இதை பார்த்து இசையமைப்பாளர் தேவா என்னை பாராட்டினார். அதன்பிறகு விவேக் வீட்டிற்கு சென்றேன். அவர் இனிமேல் இங்கே வராதே என்று சொல்லிவிட்டார். நான் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர் படம் பார்த்தேன் சூப்பரா பண்ணிருக்க. எனக்கு பெரிய ஆளா வரணுமா வேண்டாமா என்று கேட்டார்.
நான் வரணும் என்று சொன்னேன். அப்போது அவர் என்னுடன் இருந்தால் நீ பெரிய ஆளா வரமுடியாது. என்னை விட வடிவேலுவுடன் தான் எனக்கு காமினேஷன் நன்றாக வருகிறது. அதனால் வடிவேலுவை விட்டுவிடாதே என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்பிறகு வடிவேலு கூட்டணியில் இணைந்தேன். ஆனால் அவர் தன்னுடன் இருக்கும் யாரையும் முன்னேற விடமாட்டார். அவருடன் இருப்பவர்கள் அவர் காலடியில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
அவருடன் இருக்கும்போது பல அவமானங்களை சந்தித்துள்ளேன். தொடர்ந்து 5 சீசன்களில் அவருடன் நடிக்க முடியாது. திறமைசாளிகளை முன்னேற விடாமல் தடுத்துவிடுவார். கண்ணும் கண்ணும் படத்தில் கூட யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க என்ற காமெடி காட்சியில் என்னை நடிக்க விடாமல் தடுக்க எவ்வளவே செய்தார். ஆனால் படத்தின் இயக்குனர் மாரிமுத்து நான்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி நடிக்க வைத்தார்.
அதேபோல் சிங்கமுத்து எனக்கு திருமணம் செய்து வந்து பல விதங்களில் உதவி செய்துள்ளார். இன்னும் என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். ஒருமுறை பாண்டிச்சேரியில் வடிவேலு சிங்கமுத்து இருவரும் சேரவது குறித்து கேட்டார்கள். நான் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும என்று சொன்னேன். அது பேப்பரில் ஹெட்லைனாக வந்தது. இதை பார்த்த வடிவேலு நள்ளிரவு 2 மணிக்கு போன் செய்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஆபீஸ் பக்கம் வராதே என்று சொல்லிவிட்டார்.
ஆனாலும் மறுநாள் அவரின் ஆபீஸ்க்கு சென்றேன். கண்டபடி பேசினார். அவர் காலை பிடித்து கெஞ்சி மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என் நெஞ்சில் மிதித்து வெளியே போ என்று சொல்லிவிட்டார். அதோடு சரி அதன்பிறகு இன்னமும் அந்த ஆபீஸ் பக்கம் நான் போகவில்லை. திறமைசாளிகள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு தெளிவாக இருப்பார்.
இப்போது அவர் ரீ-என்ட்ரி கொடுப்பதாக இருந்த படம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பழையபடி வடிவேலு திரும்பி வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கடைசிவரை எங்களை அழைக்கவே இல்லை புதிய முகங்களை அவருடன் இணைத்துக்கொண்டு தோற்றுவிட்டார். அதனால் தொடர்ந்து மக்களை அவர் மகிழ்விக்க முடியாவில்லை. மக்கள் விரும்புதை தான் கொடுக்க வேண்டும். ஆனால் இவர் மாற்றிப்பார்த்தார் அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil