தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் முதல்வராக ஆட்சி செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கி தனது படங்களின் மூலம் மக்களுக்கு தேவையாக கருத்துக்களை கூறி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர் பலருக்கும் ஒரு முன்னுதாரணம்.
Advertisment
தற்போது அவர் இல்லை என்றாலும் அவரை பற்றி பல ஆண்டுகள் பேசும் அளவுக்கு மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல்வேறு உதவிகளை செய்துள்ள எம்ஜி.ஆர் தன்னுடன் பணியாற்றிய பலரின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அந்த வகையில் எம்.ஜி.ஆரின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் குண்டு கருப்பையா.
எம்.ஜி.ஆரின் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பற்ற இவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரிய ஒரு நபராக இருந்தார். திடீரென அவர் மறைந்துவிட்ட நிலையில், எம்.ஜி.ஆா அவரது குடுமபத்தை தத்தெடுத்துக்கொண்டுள்ளார். இதில் குண்டு கருப்பையாவின் முதல் மகனை தன்னுடனும், 2-வது மகனை அரசியலிலும் களமிறங்கி விட்ட எம்.ஜி.ஆர் கடைசி மகனான குண்டு கல்யாணத்தை டாக்டராக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.
நடிகர் குண்டு கல்யாணம்
Advertisment
Advertisements
நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக குண்டு கல்யாணம் தனது கவனத்தை நாடகத்தின் மீது செலுத்தியுள்ளார். இயக்குனர் பாலச்சந்தரின் நாடகத்தில் நடித்த இவர், தொடர்ந்து அவரின் இயக்கத்தில் அவன் அவள் அது என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். படத்திலும் நாடகத்திலும் நடிப்பதை எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்ட குண்டு கால்யாணத்திற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
ஆனால் இனியும் மறைக்க வேண்டாம் என்று நினைத்த குண்டு கல்யாணம் ஒரு சந்தர்ப்பத்தில் தான் படங்களில் நடிக்கும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் கோபத்தில் உச்சத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் குண்டு கல்யாணத்தை பார்க்கவேல்லை. நாளடைவில் முக்தா சீனிவாசன் தயாரித்த ஒரு படத்தில் குண்டு கல்யாணம் நடித்திருந்தார். தான் எடுக்கும் படத்தை முதலில் எம்.ஜி.ஆர் தான் பார்க்க வேண்டும் என்று விரும்பும் முக்தா சீனிவாசன் இந்த படத்தையும் எம்.ஜி.ஆருக்காக திரையிட்டுள்ளார்.
தனது மனைவி ஜானகியுடன் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் குண்டு கல்யாணம் வரும் காட்சிகளில் அனைத்திலும் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். படத்தை பார்த்து வீட்டுக்கு சென்றதும் குண்டு கல்யாணத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி, படத்தை பார்த்து எம்.ஜி.ஆர் ரொம்ப சந்தோஷப்பட்டார் நீ நன்றாக வருவாய் என்று பாராட்டியதாக குண்டு கல்யாணம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”