சின்னத்திரையின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ரோபோ சங்கரின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சின்னத்திரையின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று காமெடியில் கலக்கிய இவர், சிவாஜி, விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் போன்று மெமிக்கிரி செய்தும் அசத்தக்கூடியவர். மேடை நிகழ்ச்சிகளில் இருந்து சின்னத்திரைக்கு வந்த ரோபோ சங்கருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர், விஸ்வாசம் படத்தில் படம் முழுவதும் அஜித்துடன் வரும் கேரக்டராக நடித்திருப்பார். அதேபோல் மன்னர் வகையாறா படத்திலும் படம் முழுவதும் காமெடியில் கலக்கியிருப்பார். அஜித் சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

2002-ல் பிரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட ரோபோ சங்கருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகள் பிகில் மற்றும் விருமன் படத்தில் நடித்திருந்தார். பார்ப்பதற்கு குண்டாக இருக்கும் ரோபோ சங்கருக்கு அவரது உடலே அடையளமாக இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ரோபோ சங்கர் தற்போது உடல் மெலிந்து ஒல்லியாக காட்சியளிக்கிறார். படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளாரா அல்லது வேறு எதாவது காரணமாக என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“