scorecardresearch

11 தயாரிப்பாளர்கள்… மாஸ் ஹீரோ கேமியோ : பிரம்மாண்ட தயாரிப்பில் கவுண்டமணி படம்

கடைசியாக வாய்மை என்ற படத்தில் நடித்த கவுண்டமணி தற்போது திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளார்.

Goundamani 84th birthday today, net worth details in tamil
Actor Goundamani Tamil cinema

சமீபத்தில் தனது 84-வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் கவுண்டமணி சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவுண்டர் காமெடிக்கு பெயர் பெற்றவர் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இருந்தாலும் சரி சோலோவான இருந்தாலும் சரி காமெடியில் தனக்கென தனி முத்திரை பதித்த கவுண்டமணி முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வெற்றியை கொடுத்துள்ளார்.

கடைசியாக வாய்மை என்ற படத்தில் நடித்த கவுண்டமணி தற்போது திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளார். இதனிடையே சமீபத்தில் கவுண்டமணி தனது 84-வது பிறந்த நாளை கொண்டானார். இந்த நாளில் அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட நிலையில், நெட்டிசன்கள் சமூக வலைளங்களில் கவுண்டமணி தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், கவுண்டமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அவர் பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தை அன்பரசன் என்பவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் மிஷ்னின் முகமூடி திரைப்பத்திற்கு இசையமைத்த கே என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Goundamani Siva
கவுண்டமணி – சிவகார்த்திகேயன்

இந்த படத்தின் தயாரிப்பாளரான மதுரை செல்வம் அளித்த பேட்டியில், கவுண்டமணியை தேடி பல பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கதை பிடிக்காததால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பழனிச்சாமி வாத்தியார் படத்தின் கதையை கேட்டவுடன் அவர் ஒப்புக்கொண்டார் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக சஞ்சனா என்பவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பழனிச்சாமி வாத்தியார் படத்தில் 11 தயாரிப்பாளர்கள் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் மாஸ் கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema comedy actor goundamani next movie update