Advertisment

பிரபல நகைச்சுவை நடிகர் ''லொள்ளு சபா சேஷூ'' மரணம் : திரையுலகினர் இரங்கல்

சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்த சேஷூ, மேலும் பல படங்களை கைவசம் வைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Lollu Sabha Sheshu

லொள்ளு சபா சேஷூ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் சேஷூ கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ. 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 2004-ம் சூப்பர் டூப்பர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சன் டிவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார். 

சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ, வீராப்பு, வேலாயுதம், இந்தியா, பாகிஸ்தான் ஏ1, திரௌபதி, ஆண்டி இந்தியன், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் நடிக்கும் படங்களில் சேசு நடித்து வருகிறார்.

கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்த சேஷூ, மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தற்போது திடீர் மாரடைப்பு காரணமாக சேசு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே இதயத்தில் அடைப்பு இருப்பதாக நடிகர் சேஷூவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி சேஷூ மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அவருக்கு பாராட்டுக்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment