மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி மகனா இவர்? வைரல் புகைப்படம்!

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vadivel Balaji NS

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் பிரலமான நடிகர் வடிவேல் பாலாஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த நிலையில், அவரது மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் கடந்த 2008-ம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து காமெடி புரம் என்ற நிகழ்ச்சியில், வந்த அவருக்கு அது இது எது நிகழ்ச்சி பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் சிரிச்சா போச்சு ரவுண்டில் காமெடியில் அசத்திய அவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Vadivel Balaji NS

தொடர்ந்து, 2011-ம் ஆண்டு சபாஷ் சரியான போட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்த வடிவேல் பாலாஜி, கடைசியாக பெண் விலை வெறும் 999 மட்டுமே என்ற படத்தில் நடித்திருந்தார். 2019-ம் ஆண்டு ஸ்டார்ட் மியூசிக் 2-ல் பங்கேற்ற வடிவேல் பாலாஜி, 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

Advertisment
Advertisements

வடிவேல் பாலாஜியின் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், வடிவேல் பாலாஜியின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அமுதவாணனுடன் வடிவேல் பாலாஜி மகன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட அது இது எது நிகழ்ச்சியின் 3வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தில் மாலை அணிவித்த சக கலைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vadivel Balaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: