Tamil Comedy Actor Vengal Rao Emotional Interview : ஆந்திராவில் பிறந்தாலும் தனது காமெடியால் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் மற்றும் ஸ்டன்ட் கலைஞர் வெங்கல் ராவ் தற்போது தனது வறுமை நிலை குறித்து பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. தொடர்ந்து தனது காமெடி டீமுடன் சேர்ந்து மக்களை சிரிக்க வைத்த வடிவேலு, ஒரு கட்டத்தில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு அத்தனை படத்திலும் தனர் குருப்பில் உள்ள மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வந்தார்.
ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் படத்தின் 2-ம் படத்தில் நடிக்க தொடங்கிய வடிவேலுக்கும் அந்த படத்தில் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருக்கும்இடையே மோதல் ஏற்பட்டாதால், வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது. இதன் காரணமாக வடிவேலு பட வாயப்பு இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிய நிலையில், அவருடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அந்த வகையில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நடிகர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர், முதலில் ஸ்டன்ட் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஸ்ட்ன்டில் உடல் ஒத்துழைக்காததால், காமெடி நடிகராக அறிமுகமானார். அதன்படி நீ மட்டும் படத்தில், நகைச்சுவை நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.
ஆனால் வடிவேலுக்கு ரெட்கார்டு போடப்பட்டதை தொடர்ந்து வெங்கல் ராவ் உட்பட பல நடிகர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெங்கல் ராவ் தனது சினிமா அனுபவம், மற்றும் தற்போது தனக்கு படவாய்ப்பு கிடைக்காததால்,தனது வாழ்ககை எந்த நிலையில் உள்ளது என்பதை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், நான் ஆந்திராவை சேர்ந்தவன், சினிமாவில் பைட் மாஸ்டாராக அறிமுகமானேன். 25 வருடங்களுக்கு பிறகு என்னால் சண்டை காட்சிகளில் நடிக்க முடியவில்லை. எனது உடல் ஒத்துழைக்கவில்லை. அதன்பிறகு வடிவேலு சாரை சந்தித்து எனக்கு வாய்ப்பு கேட்டேன். அவரும் உடனே எனக்கு வாய்ப்பு கொடுத்தார். வடிவேலு அண்ணன் இல்லை என்றால் நான் இங்கு உட்கார்ந்திருக்க முடியாது என் வாழ்கையில் பெரிய உதவி செய்தவர் வடிவேலு அண்ணா.
என்னை மட்டுமல்ல பல பேரை வடிவேலு வாழ வைத்துள்ளார். அவருடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது சினிமாவில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நானும அவரிடம் போய் வாய்ப்பு கேட்கவில்லை. ஆனால் என் சிங்கம் இப்போது வரப்போகிறது. இனிமேல் எனக்கு கவலை இல்லை. என் சிங்கம் வந்த உடனே என்னை போன்று பலரும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவோம். நானும் யாரிடமும் காசு கேட்கவில்லை.
எங்களுக்கு பட வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் உழைத்து முன்னேறுகிறோம் என்று தான் சொல்கிறேன். இப்போது கொரோனா தொற்று வந்து பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கூறியுள்ளா வெங்கல் ராவ் தனது குடும்பத்தின் பின்னணி பற்றி உணர்ச்சிவசமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில தடை நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.