Advertisment
Presenting Partner
Desktop GIF

கை, கால் விழுது போச்சு, நடக்க முடியல: நடிகர் வெங்கல் ராவ் உருக்கமான வீடியோ; நடிகர்கள் உதவி கிடைக்குமா?

பல ஆண்டுகளாக சினிமாவில் ஃபைட்டராக இருந்த இவர், ஒரு கட்டத்தில் சண்டைக்கு உடல் ஒத்துழைக்காததால், காமெடி நடிகராக வடிவேலுவின் குழுவில் இணைந்தார்.

author-image
WebDesk
New Update
vengal rao hoso

நடிகர் வெங்கல் ராவ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து கமெடியில் கலக்கியுள்ள நடிகர் வெங்கல் ராவ், தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. 90-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர், ஒரு சில படங்களில் செந்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்திருந்தாலும், அதன்பிறகு தனக்கென தனி பாணி வகுத்து காமெடியில் முன்னணியில் இருந்தவர். தனக்கென ஒரு டீமை உருவாகி அதை வைத்து காமெடி காட்சிகளை உருவாகி வந்தார்.

வடிவேலு திரைப்படங்களில் நடித்து வந்தது வரை அவருடன் இருந்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இம்சை அரசன் படத்தின் 2-ம் பாகம் தொடர்பான எழுத்த பிரச்சனையில், வடிவேலுக்கு பட வாய்ப்பு குறைந்து சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதன் காரணமாக வடிவேலுவுடன் இருந்த நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த வகையில் வாய்ப்பு இல்லாமல் போனவர் தான் வெங்கல் ராவ்.

பல ஆண்டுகளாக சினிமாவில் ஃபைட்டராக இருந்த இவர், ஒரு கட்டத்தில் சண்டைக்கு உடல் ஒத்துழைக்காததால், காமெடி நடிகராக வடிவேலுவின் குழுவில் இணைந்தார். வடிவேலுவுடன் தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவ், ஒரு படத்தில் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடுவேன் என்று சொல்லும் ஒரு காமெடி காட்சி இன்றுவரை பேசப்படும் ஒரு காட்சியாக அமைந்துள்ளது.

அதேபோல் கந்தசாமி படத்தில் வடிவேலுவின் தேங்காய் கடையில், தேங்காய் வாங்க வரும் ஆசாமியாக சிறப்பாப நடித்திருந்தார். வடிவேலுவுக்கு வாய்ப்பு இல்லாதபோது பெரும் துயரத்தை சந்தித்த இவர், வடிவேலு ரீ-என்டரி ஆன நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் சரியாக போகாத நிலையில், வெங்கல் ராவ் குறித்து அதன்பிறகு வேறு எந்த தகவலும் இல்லை.

இதனிடையே தற்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ள வெங்கல் ராவ், எனக்கு கை, கால் விழுந்து போச்சு, நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல, பணம் இல்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லை. சினிமா நடிகர் சங்கங்கள் எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வெங்கல் ராவ்க்கு நடிகர் வடிவேலு உதவி செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், மற்ற நடிகர்களில் யார் வெங்கல் ராவுக்கு உதவி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment