காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் ததான் ஹீரோயினாக நடித்தபோது அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்பதால் தனக்கு நேர்ந்த கொடுப்மை குறித்து நடிகை தாரணி மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை தாரணி. தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின்னர் துணை நடிகையாக முத்திரை பதித்த இவர், மிடில் க்ளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பல படங்கபளில் துணை நடிகையாக நடித்துள்ள இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த, தாரணி, சினிமாவுக்கு வந்த புதிதில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இதில், ஆரம்பத்தில் சில படங்களில் துணை நடிகையாக நடித்த எனக்கு ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் கமிட் ஆகும்போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, எதுவும் பேசாத இயக்குனர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் படி கூறியுள்ளார்.
ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறிய பின்னர் அவர் தொந்தரவு செய்வதை விட்விட்டார். அதே சமயம் அந்த படத்தின் கேமராமேன், பலமுறை, என்னிட்ம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூறி வற்புறுத்தினார். அவரிடம் 'தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, நான் எப்படி சினிமாவிற்கு வந்தேன் என்று கேட்டுட்டு வாங்க, தப்பான வழியில் சினிமாவிற்கு வந்திருந்தேன் என உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் என சொன்னேன்.
நான் இப்படி பேசியதால், அந்த கேமராமேன் நேரடியாக என்னை தொந்தரவு செய்யவில்லை. அதற்கு பதிலாக அதிகமாக சூடு தடும் லைட்டுகளை, திடீரென என் முகத்தில் அடித்து கொடுமைபடுத்தினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஹீரோயின் வாய்ப்பே வேண்டாம் என முடிவு செய்து தொடர்ந்து குணச்சித்திர வேடங்களையே தேர்வு செய்து நடிக்க தொடங்கினேன் என்று தாரணி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
சினிமாவில் நடித்து வந்த தாரணி சமீப காலமாக, தொடர்ந்து சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பொன்மகள் வந்தாள், தலையானைப் பூக்கள், வாணி ராணி, தாலாட்டு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையிலும் பிரபலமாகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“