வடிவேலு உடன் காமெடி... சீரியலில் வில்லி... ஆனா இவர் குடும்பத்தில் இவ்வளவு துயரமா? | Indian Express Tamil

வடிவேலு உடன் காமெடி… சீரியலில் வில்லி… ஆனா இவர் குடும்பத்தில் இவ்வளவு துயரமா?

மருதமலை படத்தில், போலீஸ் ஸ்டேஷன் காமெடியும், காதல் கிறுக்கன் படத்தில் பஸ் ஸ்டாண்ட் காமெடியும் என்றும் மறக்கமுடியாத காமெடியாக உள்ளது.

வடிவேலு உடன் காமெடி… சீரியலில் வில்லி… ஆனா இவர் குடும்பத்தில் இவ்வளவு துயரமா?

வெள்ளித்திரையில், வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த நடிகை பிரியங்கா தற்போது சின்னத்திரை சீரியலில் வில்லியாக களமிறங்கியுள்ளார்.

சினிமாவில் காமெடிக்கு பல நடிகர்கள் இருந்தாலும், காமெடி நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால், கோவைசரளா மனோரமா உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். அந்த வகையில் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் கலக்கியவர் நடிகை பிரியங்கா.

காதல் தேசம் படத்தில் தொடங்கிய இவரின் திரைப்பயணம் தற்போது சின்னத்திரை சீரியல் வரை நீண்டுள்ளது. இடையில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதிலும் மருதமலை படத்தில், போலீஸ் ஸ்டேஷன் காமெடியும், காதல் கிறுக்கன் படத்தில் பஸ் ஸ்டாண்ட் காமெடியும் என்றும் மறக்கமுடியாத காமெடியாக உள்ளது.

மேலும் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படத்தில் அஜித்தின் கேங்கில் ஒருவராக நடித்திருப்பார் நடிகை பிரியங்கா. சமீப காலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், தற்போது சின்னத்திரையின் பயங்கரமான வில்லியாக திரைத்துறையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீதமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில், அகல்யா என்ற கேரக்டரில் பாசத்திற்காக ஏங்கி வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் பிரியங்கா நடித்து வருகிறார். இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு திரைத்துறையில் ரீ- என்டரி கொடுத்தது குறித்த சமீபத்தில் பேட்டி அளித்த பிரியங்கா கூறுகையில்,

நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது எனது அக்கா கணவர் மூலம் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. எதார்த்தமாக கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. காதல் தேசம் படத்தில் முதன் முதலாக நடித்தேன். அப்போது என்னை கருப்பாக இருப்பது போன்று மேக்கப் செய்தார்கள். இந்த ஒரு ஷாட்டை சுமார் 19, 20 டேக் எடுத்தார்கள்.

நான் நடித்த முதல் படம் என்றாலும் அப்போது அந்த படத்தை நான் பார்க்க வில்லை. சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில் தான் அந்த படத்தை நான் பார்த்தேன். அதன்பிறகு பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தேன். ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாவிட்டு விலகினேன். கொரோனா காலகட்டம் அனைத்தையும் முடக்கிவிட்டது.

இப்போது மீண்டும் சினிமா வாய்ப்பு வர தொடங்கியுள்ளது. சினிமாவில் எப்படி நடித்தாலும் சின்னத்திரையில் வில்லியாக நடித்து வெளியில் செல்லும்போது மக்கள் திட்டுவார்கள். ஆனால் நான் போனால், நான் நடித்த காமெடி சீனை சொல்லி சிரிப்பார்கள் என்று சொல்லும் பிரியங்கா வடிவேலு சார் யார் என்றே தெரியாக காலகட்டத்தில் நான் அவருடன் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் இவர் சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். எனது திருமண வாழக்கையும் விவாகரத்தில் முடிந்ததை தொடர்ந்து இப்போதான் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் அஜித் சாருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவருடன் நடிக்கும்பொது அவருடன் பழக்கும்போதும் ஒரு அண்ணன் என்ற உணர்வு இருக்கும்.

Divorce Apply பண்ணிருக்கேன்! - Priyanka 1st Time Reveals | Vadivelu Comedy Pair

பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ரீ- என்டரி கொடுத்துள்ளது நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ள இவர், தனது அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema comedy actress priyanka re entry in tamil serial